கிறிஸ்தவ மார்க்கத்தை ஆள் மாறாட்டம் செய்தல்
57-01-20M

 1.	சகோதரன் நெவில் அவர்களே, உமக்கு நன்றி. இத்தேசத்திலுள்ள சிறந்த மூவர் பாடகற்குழுக்களில், நெவிலுடைய மூவர் பாடற்குழுவும் ஒன்று என புரிந்துகொள்ளப்படுகிறது. நிச்சயமாகவே, அது சரியே. அது சரிதான். ["அதை நான் சந்தேகிக்கிறேன்" என்கிறார் சகோதரன் நெவில் ஆசி.]
 2. மேலும் வானொலிபரப்பை எத்தனை பேர் நேற்றைய தினம் கேட்டீர்கள்? இருபது வருடங்களுக்கும் மேலாக பிரசங்கித்துக் கொண்டிருக்கின்ற, நீண்டகால அனுபவமுள்ள பிரசங்கியாகிய நான், அநேக பிரசங்க பாகங்களை கேட்டிருக்கின்றேன். ஆனால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நாளுக்கான மிகவும் பொருத்தமான பிரசங்களில் ஒன்றை நான் கேட்டதாக விசுவாசிக்கிறேன், நம்முடைய போதகர் சகோதரன் நெவிலுடைய (Neville) அந்த பிரசங்கத்தை நேற்று கேட்டேன். அதை தவறவிட்டவர்கள் ஒரு பெரிய பொக்கிஷத்தை தவற விட்டு விட்டீர்கள். அது என்னுடைய இருதயத்துக்குப் பிரியமாய் இருந்தது. மேலும் என்னுடைய மனைவி பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கையில்...
 3. ஜூனி, (Junie) நான் அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன், எனவே அது வருத்தமுண்டாகாது. டெலோரஸ் (Delores) உம்மையும் பாத்திரம் கழுவும்படி செய்கிறாள் அல்லவா.. எனவே...
 4. நான் பாத்திரம் கழுவும் படி அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்த போது, நாங்கள் இருவருமே அதை நிறுத்திவிட்டு, கர்த்தர் நேற்றைய தினம் வானொலிச் செய்தியில் நம்முடைய சகோதரனை எப்படியாக உபயோகித்துக் கொண்டிருந்தார் என ஒருவருக்கொருவர் குறிப்பிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். நான் எப்பொழுதாவது ஒன்றைக் கேட்டிருந்ததிலேயே அது ஒரு அற்புதமான சிறந்த வேலைப்பாடு ஆகும். அந்த செய்தியைக் கொண்டு வரும்படியாக கர்த்தர் உபயோகித்திருந்த அவரிடம் கர்த்தருடைய பணியில் நானும் தொடர்புடையவனாயிருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அன்றியும், அந்த நால்வர் குழு, அல்லது மூவர் குழு நேற்று மிகவும் அற்புதமாக செயல்பட்டனர்; அவர்கள் எப்பொழுதுமே அப்படித்தான், நம்முடைய போதகரும் அதே போன்று தான். நாம் இதை நம்முடைய முழு இருதயத்தோடும் மெச்சுகின்றோம். காலங்கள் கடந்து செல்கையில் தேவன் நம்முடைய சகோதரனுடன் தொடர்ந்து கூடேயிருந்து பாடலிலும், வார்த்தையிலும் இப்பேற்பட்ட மகத்தான வல்லமையான செய்திகளை அருளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
 5. மேலும் இப்பொழுது... நாங்கள் ஊழியக்களத்தில் இருந்தபோது நீங்கள் எங்களுக்காக ஜெபித்த அந்த - அந்த ஜெபத்தினிமித்தமாக கர்த்தர் மகத்தாக, அபரிமிதமாக ஆசீர்வதித்திருந்தார். நம்முடைய இரட்சகர் அந்த கூட்டங்களில் செய்த அநேக காரியங்களை அறிவிப்பதற்காக நாங்கள் மிகவும் சந்தோஷமடைகின்றோம். ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டன, அல்லாமலும் - அல்லாமலும் தேவனுடைய சுகமாக்கும் வல்லமைக்குத் தேவையான நிபந்தனைகளை ஜனங்களுடைய விசுவாசம் பூர்த்தி செய்ததால், அவர்கள் சொஸ்தமடைந்தனர்.
 6. மேலும் இப்பொழுது, நாம் ஒரு அடி கூட முன்னால் சென்றிருப்பதால், இப்பொழுது, நாம் மீண்டும் வெளியே சென்று, வருகின்ற வாரத்தில் ஊழியக்களத்திற்கு, லைமா (Lima). ஒஹையோவிலுள்ள (Ohio) பாப்டிஸ்டு ஜனங்களிடத்திற்கு ஆர்வமாக செல்கின்றோம். இந்த வார லைமா கூட்டத்திற்காக, நாங்கள் நிச்சயமாகவே உங்களுடைய ஜெபத்தை வாஞ்சிக்கின்றோம்.
 7. அங்கிருந்து திரும்பி வருகையில், எவன்ஸ்வில், இன்டியானாவிலுள்ள, கிறிஸ்தவ வர்த்தக குழுவினரிடம் ஒரு நாள் இரவு கூட்டத்திற்காக செல்கிறோம், அது பிப்ரவரி மூன்றாம் தேதியன்று ஆகும். அவர்கள் ஒரு புதிய அத்தியாயத்தை ஒழுங்கு செய்கின்றனர். நான் காலையில் பேச வேண்டியதாயுள்ளது. அதன் பின்பு சாயங்காலத்தில் பனி பெய்யாமலும், வானிலை மோசமாகவும் இல்லாதிருக்குமானால் நான் திரும்பி வருவேன், அல்லது அங்கேயே தங்கியிருந்து அந்த இரவு கூட்டங்களில் கலந்து கொள்வேன். அவ்வாறு இல்லையெனில் கர்த்தருக்கு சித்தமானால் பிப்ரவரி மூன்றாம் தேதியன்று இரவு நான் இங்கே கூடாரத்திலிருப்பேன்.
 8. பின்பு. பத்து முதல் பதினேழாம் தேதி வரையில் மினியாபொலிஸில் (Minneapolis) இருப்போம். பிறகு பதினாறாம் தேதி, பதினாறு அன்று காலையில் கிறிஸ்தவ வர்த்தகர் குழு காலை உணவு கூட்டம் உள்ளது. இந்த காலை உணவு கூட்டத்தில், காலை உணவு கூட்டத்திலும் மற்ற கூட்டத்திலும் நாம்-நாம் ஒரு மகத்தான வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
 9. நாங்கள் திரும்பி வந்து, ஷ்ரீவ்போர்ட்டிற்கு செல்கிறோம்; அதன்பின் அரிசோனா பீனிக்ஸிலுள்ள மாடிசன் ஸ்கொயர் கார்டனுக்கு (Madison Square Garden) செல்கிறோம்; அங்கே பீனிக்ஸின், மாபெரும் அழகான மாடிசன் ஸ்கொயர் கார்டனில், மாரிகோபா வாலி அசோசியேஷனில் (maricopa Valiey Association) உள்ள அனைத்து ஊழியக்காரர்களின் முழு ஒத்துழைப்புடன் நமக்கு கூட்டங்கள் உண்டாயிருக்கும்.
 10. அதற்கு பிற்பாடு, அங்கிருந்து சகோதரன் எஸ்பினோசா (Espinoza) மற்றும் அனைத்து மெக்சிகோ ஜனங்களுடனும் கூட நாம் சான் ஃபெர்னான்டோ வாலி (San Fernando Valley) செல்கிறோம். அதன் பின்பு. மூன்று நாளைக்கு ஏதோவொரு ஏரிக்கு (நான் அதை மறந்து விட்டேன்) கிளியர் லேக் என்னும் ஏரிக்கு செல்கிறோம். பின்பு ஓக்லண்டிற்கும் அதன்பின் ட்வின் சிட்டி ஊழிய அசோசியேஷன் ஏற்பாடு செய்கின்ற, அழகிய பெரிய சிவிக் அரங்குக்கும் செல்கிறோம், அங்கே கிட்டத்தட்ட பத்தாயிரம் ஜனங்கள் அமரலாம், அதற்காக நாம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர் தம்முடைய ஆசீர்வாதத்தை மகத்தாக பொழிந்தருளும்படியாக ஜெபிக்கின்றோம்.
 11. சற்றே ஒரு நிமிஷம், என் உதவியாளரிடமிருந்து ஒரு குறிப்பு வந்துள்ளது. நீங்கள் பாருங்கள், நான் அதை என்னிடமிருந்து தள்ளி வைக்க வேண்டியதாயிற்று. நான்... சரி. ஆம், அது கூட்டம் முடிந்தவுடன் யாரோ என்னை பார்ப்பதாக இருந்தது. ஏதோ ஊழியக்காரர்கள், மார்ட்டின் சகோதரர்கள் வந்திருக்கின்றனர். சரி சகோதரனே, கூட்டம் முடிந்த உடனடியாகவே, நாம் டீக்கன்களுடைய அறையில் சந்திப்போம்.
 12. இப்பொழுது, நான் வார்த்தையை நேசிக்கிறேன். ஏனெனில் வார்த்தையானது தேவனுடைய சத்தியமாகும். மேலும் நான் நேற்று என்னுடைய... நம்முடைய சகோதரன் காக்ஸிடமும் (Cox) சகோதரி காக்ஸிடமும் பேசிக்கொண்டிருந்தேன். சகோதரன் இங்கு இருக்கிறார் என்று நினைக்கிறேன்... ஆம், அவர் இக்காலையில் இங்கேயுள்ளார். மற்றும் சகோதரி காக்ஸ் இங்கே இருக்கிறாளா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் ஒன்றாக கூடி வருகையில் வழக்கமாகச் செய்வதை போன்றே, நாங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தை குறித்த சில விஷயங்களை சம்பாஷித்துக் கொண்டிருந்தோம். அந்த சம்பாஷணையில், ராஜ்யத்தின் மற்ற உடன் பிரஜைகளுக்கு எதிராகப் பேசுவதை குறித்து விவாதித்தோம். அவர்கள் எவ்வாறு சில நேரங்களில், மற்ற நபரை சின்னாபின்னமாக வெட்டுவதையும், அவர்களுடைய மேலும் அவர்கள் பெயர்களை குறிப்பிட்டுக் கூறி, மேலும் - மேலும் அவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல என்று சொல்வதையும், இன்னும் பிறவற்றையும் வானொலி பரப்புகளில் கேட்கிறோம். அது வெறுமனே சிறுபிள்ளைகளைப் போன்ற ஒன்றாகும். அவ்வளவுதான், அவர்கள் வெறும் சிறு பிள்ளைகளாக மாத்திரமே உள்ளனர். நாமோ முதிர்ந்தவர்களாய் இருக்க வேண்டும். அது சரியே. அன்றியும் முதிர்ந்தவர்கள் அவ்விதமாக பேசுவதில்லையே நாம்...
 13. ஆனால் நாங்கள், நானும் சகோதரர் காக்ஸும் பேசிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன். பாரும், நான் பாவத்துக்கு எதிராக, பாவத்திற்கு எதிராக மாத்திரம் பிரசங்கிக்கும்படியாக என் உள்ளத்தில் தீர்மானித்திருக்கின்றேன். நான் அதை வெளிக் காண்பிப்பேன் மற்றும் அது - அது எங்கெல்லாம் பொருத்தப்பட வேண்டுமோ. தேவனால் அதை அதனுடைய சரியான இடத்தில் பொருத்த முடியும் என்றேன்.
 14. கீழே தென்பாகத்தில், ஒரு - ஒரு கதை கூறப்படுவதுண்டு. ஒருமறை, ஒரு சிறு - சிறு பையன் இருந்தான், அவன் தான் உழுது கொண்டிருந்த, ஒரு வரிசையில் முழங்காற்படியிட்டவாறு இருந்தான். அப்பொழுது அவ்வழியாக கடந்து சென்ற ஒரு வேதபண்டித குருமார், அந்த சிறு பையன் ஆங்கில எழுத்துக்களை "ஏ, பி, சி, டி ஒவ்வொன்றாக திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்ததை கேட்டார். அவனோ முழங்கால் படியிட்டவாறு இருந்தான், ஆகையால் அந்த குருமார் மிகவும் கலக்கத்திற்குள்ளானார், எனவே அவர் அந்த சிறுவன் ஆங்கில துவக்க எழுத்துக்களை மீண்டும் மீண்டுமாக கூறி, பின்னர் "ஆமென்" என்று கூறுவதை கேட்டார்.
 15. அவன் எழுந்தவுடன், அந்த வேதபண்டிதர் அவனிடம் பேசினார், அவர் கேட்டார். ஏன், "மகனே, நான் ஒரு... தேவனுடைய ஊழியக்காரனாவேன். நீ ஜெபித்துக்கொண்டிருந்ததை கேட்டேன், ஆனால் நீ ஆங்கில எழுத்துக்களை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தாயே. நீ ஏன் வெறுமனே ஆங்கில அகரவரிசை எழுத்துக்களை மட்டுமே கூறிக் கொண்டிருந்தாய் என எனக்கு - எனக்கு புரியவில்லை" என்றார்.
 16. அவன் சொன்னான் "ஐயா, என்னால் - என்னால் ஜெபிக்க இயலாது." "நான் - நான் ஒருபோதும் ஜெபித்ததே கிடையாது. ஆனால் ஜெபிக்கக்கூடிய ஒரு தாயும் ஒரு தகப்பனும் எனக்கு இருந்தனர், அவர்கள் பரலோகத்துக்கு சென்று விட்டனர்." என்றான். மேலும் அவன் கூறினான் "தாய், நான்... நான் அவ்வளாக சிறு பையனாக இருக்கும்போதே மரித்து விட்டாள். ஆனால் அவள் பாடுகளுக்குள்ளாக இருந்த வேளையில், அவள் கர்த்தரிடம் சென்று ஜெபித்ததை நான் கேட்டிருக்கிறேன். அன்றியும் நான் மிகவும் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே அவள் மரித்து விட்டதால், அவளால் எனக்கு ஜெபம் செய்ய கற்றுக் கொடுக்க முடியவில்லை. பின்பு, என்னை அடித்து. தவறாக நடத்துகிற ஒரு இரக்கமற்ற மனிதனிடம் ஒப்படைக்கப்பட்டேன். மேலும், நான் - நான் ஒருக்கால் என்னுடைய துவக்க எழுத்துக்களை (ABC's) கற்றுக்கொண்ட பின்பு, அந்த எல்லா வார்த்தைகளையும் எடுத்து. எல்லா எழுத்துகளையும் கூறக்கூடுமானால், ஒருவேளை அவரால் அவற்றை ஒருங்கிணைத்து, நான் என்ன அர்த்தத்தில் ஜெபிக்க முயன்றேன் என அவரால் புரிந்து கொள்ள இயலுமென்று எண்ணினேன்" என்றான்.
 17. உத்தமமான ஜெபம் என்பது அதுதான். நிச்சயமாகவே அவரால் அவற்றை ஒருங்கிணைத்துக்கொள்ள முடியும். நாம் நம்முடைய உதடுகளால் எவ்வாறு ஜெபிக்கிறோம் என்பதையல்ல, இருதயத்தின் உள்நோக்கத்தையே தேவன் கேட்கிறார். சில வேளைகளில் அவர் நம்முடைய உதடுகள் ஜெபிப்பதை கேட்பதில்லை; அவர் நம்முடைய உட்கருத்து, இருதயத்தின் உள்நோக்கம் என்னவென்பதையே கேட்கின்றார்.
 18. எனவே, நேற்று அதை செய்து கொண்டிருந்தபோது, இந்த நேரத்தைக் குறித்து நான் மிகவும் தாக்கம் கொண்டேன். அது இந்த கூடாரத்திலேயே இருப்பதால், பிரயோஜனமாக இருக்கத்தக்கதாக அல்லது ஒரு உதவியாக இருக்கும் வண்ணம். நான் எண்ணிக் கொண்டிருந்த சில காரியங்களை ஒருக்கால் வெளிப்படுத்திக் கூறுவேன், மேலும் யாருடைய விசுவாசத்திற்காவது முரணாக இருக்கிற ஏதாவது இனிமையற்ற ஒன்றை எப்பொழுதாவது கூறுவேனானால், நான் அது அப்படி அர்த்தம்கொள்ளுமாறு நிச்சயமாகவே கூற விரும்புவதில்லை. ஆனால், அதை ஒரு - ஒரு அன்பின் காரணமாக மாத்திரமே வெளிப்படுத்துகிறேன்.
 ஒருவேளை அதை நேராக்கும் படி முயற்சிக்கவே விரும்புகிறேன். உதாரணமாக தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிராத ஜனங்கள், அதைப் போன்ற காரியங்கள். நீங்கள் அதில் விசுவாசம் கொண்டிருக்கவில்லை. ஏன், நான்... நான் அதை விசுவாசிக்கிறேன் என்று கூறும்போது, அது - அது நான் உங்களிடம் வம்பு செய்ய முயல்கிறேன் என்றல்ல. ஆனால் அதில் விசுவாசம் கொண்டுள்ளவர்களிடத்தில் பேச முயற்சிக்கிறேன் என்பதாகும்; நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என புரிந்து கொள்வீர்களானால்.
 19. இப்பொழுது. தேவன் புரிந்து கொள்வாரென ஜெபிக்கிறேன். அவர் புரிந்துகொள்வார் என்பதை அறிவேன். அவர் புரிந்து கொள்கிறார்; நாம் அதை அறிந்துள்ளோம். இப்பொழுது. நான் கனடாவிலிருந்து வந்த, மிகவும் கல்வியறிவுடைய ஒரு மனிதனிடம் பேசிக் கொண்டிருந்தேன். நாம் அறிந்துள்ளபடி கனடா நாட்டினர்... அவர்களை நீங்கள் அறிவீர்களானால், எப்பொழுதாவது தனிப்பட்ட முறையில் அவர்களிடம் பழகியிருப்பீர்களானால் தெரிந்திருக்கும், அவர்களில் அநேகர் கற்றறிந்தவர்கள், மிக ஆழமாக கல்வி கற்றவர்கள் மற்றும் நமக்கு இங்கே இருக்கின்ற பல தொல்லைகள் அங்கு அவர்களுக்கு இல்லை. அங்கே நான் இந்த மனிதனை கண்டேன், என்னை விட அதிக வயது அவருக்கு இருக்காது, ஒருவேளை அவர் ஐம்பது வயதுடையவராக இருக்கலாம். அவருக்கோ முழுவதுமாக நரைத்துவிட்டிருந்தது. அவருடைய மீசையும் நரைத்திருந்தது. ஆயினும் அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் ஆகியிருக்காது. மேலும் நான் தங்கியிருந்த அறைக்கு அவர் வந்த போது, அவரிடம் கூறினேன் "என் சகோதரனே" என்றேன். அவர் ஒரு - சபையின் மேய்ப்பனாக இருந்தார். நான் சொன்னேன்... அவரை நோக்கிப் பார்த்தேன்.
 20. சற்றே சில வருடங்களுக்கு முன்பு. சாஸ்கட்டூனில் (Saskatoon) ஒரு பெரிய அரங்கில் எங்களுக்கு ஒரு மகத்தான கூட்டம் உண்டாயிருந்தபோது, நான் முதலாவது சுவிசேஷ கூட்டங்களை துவங்கிய போது அவர் கருப்பு நிற தலைமயிரை உடையவ ராயிருந்தார். அவருடைய மீசையும் கருமையாக இருந்தது. மேலும் அவர்... அவருக்கு இரண்டு சிறு மகள்கள் இருந்தனர். இப்பொழுதோ அவர்களுக்கே விவாகமாகி, பிள்ளைகள் இருக்கின்றனர்.
 ஆகவே நான் என் உள்ளத்தில் கேட்டேன் "ஓ. என்ன சம்பவித்து விட்டது? என்றேன்.
 21. அவர் கூறினார் "சகோதரன் பிரன்ஹாம். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன், நான் நினைத்தேன், ஒருவேளை கர்த்தர் என்னை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஊழியப்பணி செய்யும் படி அழைத்தார் என்று நினைத்தேன். அவர் "நான் மேற்குக்கரைக்குச் சென்று நாடு முழுவதும் செல்கின்ற ஒரு குறிப்பிட்ட வானொலிபரப்பு நிறுவனத்திடம் தொடர்பு கொண்டேன் என்றார். அவர் கூறினார் "உள்ளே அனுப்பப்படுகின்ற நிதியை அவர்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதன் நேர்மையற்ற தன்மையை நான் கண்ட போது," ஒரு கிறிஸ்தவனாக, என்னால் அங்கே தொடர்ந்து இருக்கவே முடியவில்லை. நான் அங்கிருந்து விலகி விட்டேன், பின்னர் வேறு ஒரு நிறுவனத்திடம் இணைந்தேன். என்றார். அவர் கூறினார். "அதுவோ வறுக்கும் தட்டிலிருந்து, நெருப்புக்குள்ளேயே சென்றதைப் போல இருந்தது" என்றார். அவர் "பின்பு நான் தொடர்ந்து நிறைய காரியங்களை கண்டுபிடித்தேன்." அமெரிக்க பிரசங்க பீடத்தின் பலவீனத்தை காணும்படியாக" என்றார்.
 22. நான் சொன்னேன். "சகோதரனே. அது உண்மைதான். இங்கே அதை பேசும்படி எங்களுக்கு இடைப்பட்ட நடுத்தர வகுப்பினரே கிடையாது. எங்களிடம், ஒன்று மிக குளிர்ந்து போய், வைதீகமான விறைத்துப் போன கூட்டத்தினர் உள்ளனர் அல்லது தீவிர மூடமத வைராக்கியம் பிடித்த கூட்டத்தினரே உள்ளனர். நடுநிலையில் உள்ளவர்கள் எங்களிடம் இல்லை." "அது - அது மிகவும் மோசமாக உள்ளது" என்றேன்.
 23. மேலும் அவர் கூறினார் "பின்பு, நான் இங்கே வந்தேன்" அவர் "சகோதரன் பிரன்ஹாம், நான் இங்கே வந்தவுடன், என்னுடைய முதலாவது செய்தியின்போதே நான் கண்டு கொண்டதென்ன வென்றால், பியானோ அடிக்கப்படுவதையும் நாற்காலிகளை புரட்டி அடிக்கப்படுவதையும் கண்டேன். மேலும் அவர் "பின்னர் நான் வியக்கத் தொடங்கினேன்" "அதன்பின் அவை எல்லாவற்றினூடாகவும் நான் சரியாக வார்த்தையின் படியே சுவிசேஷத்தை பிரசங்கிக்க முயற்சித்தேன், அதைச் செய்யத் துவங்கின போது" என்றார், அவர் கூறினார் "நான்... அங்கே வேறு ஏதோவொன்று உண்டானது, அதாவது சிறிது நேரத்திற்குப் பின், கர்த்தர் அத்தடைகளைக் கடந்து நான் அபிஷேகத்திற்குள்ளாகும்படி செய்தார் அல்லாமலும் பரிசுத்த ஆவியானவர் எங்கள் மத்தியிலே ஒருவித அன்புடன் கடந்து வந்தார். தேவ சமாதானமானது கட்டிடத்தில் அசைந்தொழுக ஆரம்பித்தது" என்றார்.
 24. அவர் "பின்னர் நான் 'இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார், நாம் இப்பொழுது கர்த்தரை ஆராதித்து, நம்முடைய ஜீவியங்களை தேவனுக்கென்று ஒப்புவிப்போம்" என்று சொன்னேன் என்றார்.
 25. மேலும் அவர் கூறினார். "யாரோ ஒரு வாலிபன், வாசலுக்குள்ளே வருவதற்கு கூட போதுமான ஞானம் இல்லாத ஒருவன், பிரசங்க பீடத்தண்டைக்கு ஓடி வந்து அவன் சொன்னான், பிரசங்கியே! ஆமென். அது சரிதான். பாரும், காலைமுழுதும் என்னுடைய கைகளில் இருந்து, எண்ணெய் ஒழுகிக் கொண்டேயிருக்கின்றது. அல்லேலூயா! ஜனங்கள் இங்கே மேலே வருவார்களாக. நான் இந்த அபிஷேக எண்ணெயை சுகமளிப்பதற்காக தருகிறேன்" என்றானாம்.
 26. அவர் "சகோதரன் பிரன்ஹாம், நான் 'மகனே நீ ஒரு இருக்கையைப் பார்த்து உட்கார் என்று சொன்னேன்" என்றார்.
 27. மேலும் அவர் "என்ன நடந்தது என்று உமக்குத் தெரியுமா? முதன்மையான மூப்பர் என்னிடம், 'உனக்கு ஒரு இருக்கையைப் பார்த்து, நீ உட்கார்' என்று கூறினார்" என்றார்.
 28. அவர் கேட்டார் "நம்மால் எவ்வாறு இந்த இரண்டு விதமான மூட மத வெறிக்கூட்டத்தினரின் நடுவேயுள்ள அந்த ஸ்தானத்தை பற்றி கொண்டிருக்க பிரயாசிக்கின்ற நீரும் அல்லது பிரசங்கிகளும் எவ்வாறு அந்த சுமையை சமநிலைப் படுத்த முடிகின்றது? " என்றார்.
 நான் சொன்னேன், "அது தேவகிருபை மாத்திரமே." என்றேன். ஓ, என்னே ஒரு நிலைப்பாடு?
 29. அன்றியும் அந்த மனிதன் தன் கைகளால் முகத்தை மூடியவாறு, அழத்தொடங்கினார். நானும் என் மனைவியும் அங்கே நின்று கொண்டிருக்கையில், கண்ணீர் தன்னுடைய கால் சட்டைமீது விழும் வரையிலுமாக அழுதார். அவர் "சகோதரன் பிரன்ஹாம், இந்த பொல்லாத ஆவியின் குழப்பத்தை விட்டு அகன்று செல்லும்படியாக, நான் சாஸ்கட்டூனிற்கு செல்கிறேன்" என்றார்.
 30. நான் கூறினேன் "அது உண்மைதான். அமெரிக்க, பொது சமூகம், அறிவுத்திறமை வாய்ந்த குழுவினர், அந்த மற்ற குழுவிற்கு மிகவும் எதிரானவர்களாகிவிட்டனர். மேலும் அந்த ஏனைய குழுவினரோ வெனில் மூட மத வைராக்கியத்திற்குள்ளாகச் சென்று விட்டனர். உண்மையான சுவிசேஷம் முதன்மையான ஸ்தானத்தை பெறுவதற்கும், அணுகும்படியான ஒரு ஸ்தலத்தை கண்டறிவதும் கடினமான காரியமாகிவிட்டது" என்றேன்.
 31. ஆனால், நான் வீட்டை விட்டு வெளியேறிய பின், வருகின்ற வழியில் சகோதரன் காக்ஸுடன் பேசிக்கொண்டு வந்தேன். அவர் இது எதையுமே அறிந்திருக்கவில்லை. அவர் இங்கே அமர்ந்திருக்கின்றார். வருகின்ற வழியிலே நான் கூறினேன் "கர்த்தாவே, அது எவ்வளவு சத்தியமாய் உள்ளது. அவ்விரண்டு சாராரிடமிருந்தும் இழுத்து, ஜனங்களுக்கு சத்தியமான சுவிசேஷத்தை கொண்டு செல்ல பிரயாசிப்பதும், நடுநிலையை பற்றியிருக்க முயற்சி செய்து கொண்டிருப்பதும் எவ்வளவு கடினமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த மூலைக்கல்லானது நாட்டப்பட்ட மணி நேரம் முதற்கொண்டு நாங்கள் அதற்காக போராடிக் கொண்டிருக்கிறோமே" என்றேன். புரிகிறதா? இப்பொழுது, மேலும் சில...
 32. நான் "இங்கேயுள்ள இந்த அமெரிக்கர்களை குறித்த காரியம் என்ன? அவர்களுக்கு என்ன சம்பவிக்கபோகிறது?" என்றேன். அப்பொழுது ஏதோ ஒன்று பேசுவது போல் தோன்றியது... என்னிடம் பேசி "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உனக்கென்ன? நீ என்னைப் பின்பற்றி வா" என்று கூறினது.
 33. அப்பொழுது, நான் அந்த மூலைக்கல்லை நாட்டின நாளன்று உண்டான அத்தரிசனம் என் நினைவுக்கு வந்தது. வீட்டுக்கு திரும்பிச் சென்ற பின், நான் அதை என் மனைவியிடம் குறிப்பிட்டுக் கூறினேன். மூலைக்கல் நாட்டப்பட்ட அன்று காலையில் உண்டான தரிசனம் எத்தனை பேருக்கு நினைவிருக்கின்றது? இருபத்து மூன்று வருஷங்களுக்கு முன்பென்று நினைக்கிறேன். அது அங்கே அந்த மூலைக் கல்லிலேயே இட்டுவைக்கப்பட்டுள்ளது. மேலும் அது...
 34. நான் இங்கிருக்கின்ற அந்த தெருவுக்கு எதிரேதான் குடியிருந்தேன். மூலைக்கல் நாட்டப்பட்ட அந்த ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் என்று நம்புகிறேன், ஒரு நாள் காலை சுமார் ஏழு மணிக்கு எழுந்தவுடன், அன்று காலைப் பொழுதில் கிழக்கே சூரிய உதயத்தை கண்டவாறு நான் கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் கூடாரத்துக்கு மூலைக்கல் நாட்டப்படவிருந்தது. திரு மார்க்கம் (Marcum) மற்றும் மற்றவர்களும் இங்கேயிருந்தனர், மேலும் அவர்களில் அநேகர் அஸ்திபாரம் தோண்டுதல் போன்றவற்றை செய்தவர்களாக இருந்தனர். நான் மூலைக்கல்லை நாட்டவிருந்தேன். நம்மிடம் அதன் புகைப்படங்களும் மற்றவையும் உள்ளன. மேலும் ஒவ்வொருவரும் அந்த மூலைக்கல்லில், ஒரு குறிப்பிட்ட சிறு அடையாளத்தை இட்டு வைப்பதாகயிருந்தது. கத்தோலிக்கர்களும் கூட வந்து தங்களுடைய சிறு ஜெப மாலைகளையும் மற்றும் அதை போன்றவற்றையும் அவர்களிடம் இருந்தது எதுவாக இருப்பினும் அந்த மூலைக்கல்லினுள் இட்டனர்.
 35. ஆனால், அந்தக் காலையில், நான் அதை நாட்டிக்கொண்டிருந்த போது பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசினார். நான் சென்று... அந்நாட்களில் அதை ஒரு தரிசனம் என்று அழைக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது. நான் அதை வெறுமனே ஒரு ஞான திருஷ்டி என்று அழைத்திருந்தேன். மேலும் கண்ட தரிசனமானது, பேசி, நான் என்னுடைய பணியானது திரித்துவம் மற்றும் ஒருத்துவம் என்னும் இவ்விரண்டு பெந்தெகொஸ்தே குழுவினரின் இடையே உண்டாயிருக்கும் என்றும், அவ்விரண்டு சாராரிடமுமே நிரப்பப்பட வேண்டிய வெற்றிடமானது உள்ளதென்றும் அந்த தரிசனம் உரைத்தது. நான் அந்த இரண்டையும் இனக்கலப்பு செய்யவில்லை. நான் வெறுமனே அந்த இரண்டு மரங்களிலிருந்தும் உடைத்து நட்டேன். அவை விரைவாக வளர்ந்து, மகத்தான விருட்சங்களாக வானபரியந்தம் எட்டின. மேலும் கனிகள் விழுந்தன, அவை சுவை மிகுந்தவைகளாக இருந்தன. நான் அவற்றை புசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு சற்றே முன்னாக இருந்த சிலுவையண்டை முழுவதுமாக கனிகளால் மூடப்பட்டிருந்தது
 36. பின்பு நாள் அவ்விடத்தை அடைந்தபோது, பரிசுத்த ஆவியானவர் அந்த மரங்களின் உச்சியில் இறங்கி வந்து குலுக்கி காஜித்தவாறு, அது கூறினது "ஒரு சுவிசேஷகனுடைய வேலையைச் செய்" என்றது. அது "நீ இதிலிருந்து வெளியே வந்தவுடன், இரண்டு தீமோத்தேயு (4) நான்கை வாசிப்பாயாக" என்றது. சுவிசேஷகனுடைய வேலையைச் செய்வாயாக, இது உன்னுடைய கூடாரம் அல்ல" என்றது. நான் "எங்கே " என்றேன். மேலும் நான் இந்த கூடாரமானது இன்று இருப்பதைப் போன்றே கண்டேன்.
 நான், "என்னுடைய கூடாரம் எங்கே" என்றேன்.
 37. அவர் என்னை பிரகாசமான நீல வானத்தின் கீழ் அமரச் செய்து. அவர் கூறினார், " சுவிசேஷகனுடைய வேலையைச் செய். உன் ஊழியத்தை நிறைவேற்று, ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி. தங்கள் போதகர்களை தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும்" என்றார்.
 38. அது வார்த்தைக்கு வார்த்தை அப்படியே சம்பவித்திருக் கின்றதல்லவா? ஆதலால் தான் நான் வார்த்தையுடன் உறுதியாக தரித்திருக்க முயற்சித்திருக்கிறேன். இன்று இரவு என்னுடைய பொருளும் "வார்த்தையின் மேல்" என்பதேயாகும்.
 39. இப்பொழுது, இக்காலை வேளையில் நான் வேறொரு பொருளை தேவனுடைய கிருபையைக் கொண்டு அனுக விரும்புகிறேன். ஆனால் நான் அதை அணுகுவதற்கு முன், நீங்கள் எசேக்கியேல் 6-ஆம் அதிகாரத்துக்கு திருப்புகையில், நான் இதைக் கூற விரும்புகிறேன், அதாவது அணுகுமுறையிலும், எல்லாவற்றிலும் நான் வார்த்தையை சரியான ஒழுங்கு கிரம வரிசையில் காத்துக்கொள்ளும்படியாக கடினமாக பிரயாசித்திருக்கின்றேன். ஆகையால், நான் எப்பொழுதுமே வார்த்தைக்கு உண்மையுள்ளவனாய் இருக்கும்படி எனக்காக ஜெபியுங்கள். வார்த்தைக்கு! அவ்வளவுதான்: சரி,
 40. இப்பொழுது எசேக்கியேல் 36 - ஆம் அதிகாரம் 26 - வது வசனத்தை வாசிக்க தொடங்க விரும்புகிறோம்.
 நவமான இருதயத்தைக் கொடுத்து... உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு,
 41. மேலும் 27- வது வசனத்தில்,
 உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும்.
 42 இப்பொழுது, நாம் இதை அணுகுவதற்கு முன் சற்றே நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமா.
 43. எங்கள் பரலோக பிதாவே, இன்று நன்றியுள்ள இருதயங்களுடன், நாங்கள் அமைதலுடனும் பயபக்தியுடனும் இந்த புனிதமான கணப்பொழுதை அணுகும்போது மாத்திரமே இங்கேயிருக்கின்ற ஒரு ஆத்துமாவினுடைய நித்தியமான இறுதி ஸ்தலத்தை தீர்மானிப்பது, சரியாக இந்த மணி நேரமேயாகும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்த ஆத்துமாவுடைய மதிப்போ பல்லாயிரம் உலகங்களுடன் ஒப்பிடத்தக்கது. ஆகையால் பிதாவே, நாங்கள் பயபக்தியுடனும், பக்திபூர்வமாகவும் ஜெப மனப்பான்மையுடனும் அணுகும்படி செய்யும்.
 44. அன்றியும் வியாதியஸ்தராகிய ஜனங்கள் ஒருக்கால் இங்கே உட்கார்த்திருக்கக் கூடும். அவர்கள் இந்நாளில், இந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ளுகின்ற மனப்பான்மைதான் அவர்கள் இப்பூமியில் எவ்வளவு காலம் வாழப்போகிறார்கள் என்பதை ஒருவேளை தீர்மானிக்கக் கூடும். எனவே சரியாக இந்த மணிப்பொழுதின் பயபக்திப்பூர்வ நிலையை நாங்கள் உணர்கிறோம்.
 45. நீர் எங்களை மண்ணிலிருந்து எடுத்தீர், நாங்கள் மண்ணுக்குத் திரும்புவோம், நாங்கள் பூமிக்குரிய ஜனங்களாயிருப்பதை காண்கையில், உம்முடைய மகத்தான பிரசன்னமானது எங்களை அபிஷேகம் செய்யும்படியாக வேண்டிக்கொள்கிறோம். அல்லாமலும் நாங்கள் இந்த மண்பாண்டத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் போது மாத்திரமே, உம்மை சேவிப்பதற்கும், உமக்காக மற்றவர்களை ஆதாயம் செய்யும்படியான சிலாக்கியத்தை உடையவர்களா யிருக்கின்றோம். ஆகையால் எங்களுடைய இருதயங்களை உம்முடைய வார்த்தைக்கு ஒப்புக்கொடுக்கச் செய்யும்படியும், எங்களுக்கு தேவையான வார்த்தையைப் பரிசுத்த ஆவியானவர் தாமே எடுத்து அருளுமாறும் கேட்கிறோம். இதை நாங்கள் உம்முடைய நேசகுமாரனாகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
 46. நான் பேரைக் குறிப்பிட வேண்டுமானால்.. இக்காலையில் ஒரு சில நிமிஷங்களுக்கு. அன்றொருநாள் என் மனைவி என்னிடம் சொன்னாள், "பில்லி, நீர் உம்முடைய பிரசங்க பாகங்களை இரண்டரை மணி நேரத்துக்கு மாறாக முப்பது நிமிஷங்களுக்கு குறைத்துக் கொள்வீரானால், அது இன்னும் அதிக பலனளிப்பதாயிருக்கும் என்று நினைக்கிறேன்" என்றாள்.
 47. அதற்கு நான் "உன்னை நான் எவ்வளவு நேசிக்கிறேனோ, அதே அளவுக்கு அது உண்மைதான் என்பது எனக்கு தெரியும், ஆனால், பார். பரிசுத்த ஆவியை தவிர என்னை நடத்தும்படிக்கு வேறு யாரையும் நான் கொண்டிருக்கவில்லை" என்றேன்.
 48. அவர் அதை உந்தித்தள்ளுகின்ற வரையிலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது, எனவே அவ்விதமாகத்தான் நான் செய்ய வேண்டியவனாக இருக்கிறேன். அவர் அநுக்கிரகித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், அவர் நிறுத்தாமல், நானாக நிறுத்திக் கொள்வேனானால் அப்பொழுது நான் ஒரு பரிதபிக்கப்படத் தக்கவனாயிருப்பேன், என் பிரசங்கத்தை கேட்போருக்கும் அவ்விதமாகவேயிருக்கும். ஊக்குவிக்கப் படுதலினாலே பேசுகின்ற மற்ற எந்த ஊழியக்காரருக்கும் அப்படித்தானிருக்கும்.
 49. ஆனால் இக்காலை வேளையில் என்னுடைய பொருளை நான் அழைக்க வேண்டுமானால்: கிறிஸ்தவ மார்க்கத்தின் ஆள்மாறாட்டம் என்பதாகும். கிறிஸ்துவத்தை ஆள்மாறாட்டம் செய்தல்.
 50. இங்குள்ள வேத வசனத்தில், அதுதான் தேவனுடைய வார்த்தையாகும், நாம் இங்கே வாசிக்கிறோம். அதாவது அந்த தீர்க்கதரிசி ஒரு புதிய நாளைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தான். இப்பொழுது எசேக்கியேல், அவனுடைய நாளில் அல்ல, ஆனால் இனி வரப்போகின்ற ஒரு காலத்தில் என்ன சம்பவிக்கும் என்பதை முன்கூட்டியே அறிவித்தான் அல்லது தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தான்.
 51. ஆனால், ஒரு தீர்க்கதரிசி என்பவன், ஒரு ஞான திருஷ்டிக்காரனாவான். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள படி, ஆகாயத்தில் உயரே செல்லக்கூடிய கழுகு என்று குறிப்பிடப்படுகிறான். உங்களால் எவ்வளவு உயரே செல்லமுடிகின்றதோ, அவ்வளவு தொலைவில் பார்க்க முடியும்.
 52. ஆகவே, ஒரு கழுகு மற்றெந்த பறவையைப் பார்க்கிலும் வெகு உயரத்திற்கு பறந்தெழும்பிச் செல்கிறது. வேறு எந்த பறவையாலும் கழுகுடன் செல்ல முடியாது. மேலும் ஒரு கழுகின் கண்ணைப் போல வேறு எந்த கண்ணும் கிடையாது. ஒரு பருந்துக்கு அதன் பார்வையில் எந்த ஒரு வாய்ப்புமே கிடையாது. அன்றியும் ஒரு கழுகினால் பறந்துயரக்கூடிய உயரத்தை ஒரு பருந்தினால் தாங்கிக்கொள்ள இயலாது. அது மரித்து விடும். ஒரு கழுகிற்கு உண்டான உடல்வாகு அதற்கு... அதற்கு இல்லை.
 53. இப்பொழுது, பருந்து ஒரு பறவைதான். மற்ற பறவைகளும் அவ்வாறுதான் உள்ளன. ஆனால் ஒரு கழுகு இவ்விதமாய் உண்டாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அது ஒரு உயரே பறந்துயருகின்ற ஒரு பறவையாகும். அதனால் மிக அதி உயரத்துக்கு பறந்து சென்று மற்ற பறவைகளால், பார்க்க முடியாதவற்றை கழுகினால் பார்க்கக் கூடும். ஏனென்றால் அது அவற்றைவிட உயரே இருப்பதால், தேவன் கழுகை உண்டாக்கின போது அதை அந்த நோக்கத்திற்காகவே உருவாக்கினார், ஏனெனில், அதனுடைய கூடு மற்ற பறவைகளின் கூட்டை விட உயரத்தில் உள்ளது. அதனுடைய குஞ்சுகள் உயரே கூட்டில் இருக்கும், அவை தரையில் இரையை உண்கின்றன. ஆகையால் வருகின்ற புயலை அல்லது தொல்லைகளை காண்பதற்கும், தப்பித்துக்கொள்வதற்கும் கழுகானது உயரே சென்றாக வேண்டும். அப்பொழுதுதான் தன்னுடைய குஞ்சுகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
 54. மேலும் தேவன் தீர்க்கதரிசியை கழுகுக்கு ஒப்புமைப்படுத்தியதால் ஒரு தீர்க்கதரிசி அவ்விதமாக உருவமைக்கப்படுகிறான். அவன் ஒரு ஒரு ஞானதிருஷ்டிக்காரனாகையால், சபையினுடைய உணர்ச்சிவசப் படுதலுக்கும் அப்பால் ஆவியில் உயர்ந்தேறுகின்றான். அவன் இசையின் தாளத்துக்கு அப்பால் செல்கிறான். அவன் கைதட்டுதலுக்கும் அப்பால் செல்கிறான். அவன் பரிசுத்தவான்களின் மத்தியில் உள்ள களிகூறுதலுக்கும் அப்பால் போகிறான். அவன் அவை யாவற்றிற்கும் அப்பால் செல்கிறான். தேவன் அவனை மாத்திரம் தனியே ஒரு மண்டலத்திற்கு கொண்டு வருகிறார். அதன்பின் அவர் அவனுடைய கண்ணைத் திறந்து, சுற்றிலும் நோக்கிப் பார்க்க செய்து, இனி வரப்போகின்ற காரியங்களை அவன் காணும் படி செய்கிறார். அதன் பின்னர் அவர் அவனை சரீரத்தின் அங்கத்தினர்கள் மத்தியில் மீண்டும் கீழே கொண்டு வந்து, சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் காரியங்கள் என்னவென்பதை முன்கூட்டியே அறிவிக்கும் படி செய்கிறார்.
 55. எனவே தேவன் எசேக்கியேலை எடுத்து, உயரே வெகுதூரம் கொண்டுசென்று ஏறத்தாழ இரண்டாயிரத்து அறுநூறு வருஷங்களை சுற்றிலும் காணும்படி செய்தார். அதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுது, அவன் அதை கொண்டிருக்குமாறு.
 அதுவுமல்லாமல், ஒரு - ஒரு தீர்க்கதரிசி என்பவன், அறிவின் ஒரு வரமாக இருக்கிறான். அறிவு என்பது...
 56. புஸ்தகங்களை கற்றறிகின்ற ஒரு வழக்கறிஞரைப் போன்று நீங்கள் உங்களுடைய வழக்கை வாதாடுவதற்காக ஒரு வழக்கறிஞருக்கு கூலி பொருத்துகையில், அவன், தான் அறிந்திருப்பதற்கு மாத்திரமே அக்கூலியை பெற்றுக்கொள்கிறான். உங்களுடைய வழக்கை நீதிபதி முன்பாக எடுத்துரைக்கத்தக்கதாக, தான் என்ன அறிந்திருக்கிறானோ, அதற்காகவே நீங்கள் அவனுக்கு ஊதியத்தை கொடுக்கிறீர்கள்.
 57. மேலும், இப்பொழுது வேதத்தில் ஒரு அறிவின் வரம் என்பது ஒரு தீர்க்கதரிசனமாகும். அது மேலே சென்று, இனிவரப்போகும் காரியங்களை கண்டுபிடித்து அவற்றை திரும்ப கீழே கொண்டு வருகின்றதாகும். ஆனால் அவை இவ்வேதத்துடன் இந்த புஸ்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டும். அவை இந்த புஸ்தகத்துக்கு வெளியே இருக்குமானால், அப்பொழுது அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, ஏனென்றால் நியாயாதிபதியானவர், அந்த புஸ்தகத்தைக் கொண்டே நியாயம் தீர்ப்பார். உங்களுக்கு அது புரிகிறதா? ஆகவே அது வார்த்தையில் இருக்க வேண்டும்.
 58. பின்பு, அது தேவன் உரைத்து அந்த நேரத்தில் தீர்க்கதரிசியிடம் ஏதோ ஒன்றை பேசுகின்றதல்ல, அது உலகத்தோற்றத்துக்கு முன் தேவன் உரைத்திருந்த வார்த்தையாகும். அது தேவன் ஏற்கனவே என்ன கூறியிருந்தாரோ, அதை தீர்க்கதரிசி கவர்ந்து பிடித்துக் கொள்கிறான். ஏனென்றால் வார்த்தையானது உலகத்தோற்றத்துக்கு முன்பே உண்டாயிருந்தது. தேவன் வார்த்தையை உரைத்தார், அது பாதையை உண்டாக்கி காலத்தினூடாக நீண்டு செல்கின்றது. மேலும் ஒரு தீர்க்கதரிசி மேலே சென்று வரப்போகின்ற அந்தக் காலத்தை காண்கிறான். ஆகவே, அது ஒரு அறிவின் வரமேயாகும், அவன் அதைக் கீழே கொண்டுவந்து காகிதத்தில் எழுதுகின்றான்.
 59. இப்பொழுது. தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் மேலே சென்று நாம் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற இந்நாளை காண்கிறான். ஓ, யாக்கோபின் ஏணியின் மேல் என்னே ஒரு பயணம்! இந்த கடைசி வருஷங்களில், இந்த கடைசி இரண்டாயிரம் வருஷங்களில் என்ன சம்பவிக்க போகிறது என்பதை அவன் முன்கூட்டியே கண்டு, அதை கீழே கொண்டு வருகிறான்... எசேக்கியேலோ கிறிஸ்துவின் வருகைக்கு முன் சுமார் அறுநூறு அல்லது எண்ணூறு வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்தவனாயிருந்தான்.
 60. அவர்களுக்கு ஒரு கல்லான இருதயம் உண்டாயிருந்ததால், பரிசுத்த ஆவியானவரால் அந்த இருதயத்துக்குள் நுழைய முடியவில்லை. அது பாவம் நிறைந்ததாக இருந்த காரணத்தால், அவருக்கு அந்த இருதயத்துக்குள் நுழைய எந்த வழியும் இல்லாதிருந்தது. மேலும் சிருஷ்டிகருக்கும் அக்கல்லான இருதயத்துக்குமிடையே ஒரு மிருகத்தினுடைய இரத்தம் மாத்திரமே பாவ நிவிர்த்திக்காக உண்டாயிருந்தது. ஆனால் மாற்று வஸ்துவாகிய அந்த மிருகத்தின் இரத்தமானது நிச்சயமாகவே வரப்போகின்ற அந்த உண்மையான இரத்தத்திற்கு ஒரு நிழலாய் அல்லது ஒரு மாதிரியாக மாத்திரமே இருந்தது. அந்த இரத்த அணுவிலிருந்த ஜீவன் ஒரு மிருகத்தினுடைய ஜீவனாகும். அதனால் மனுஷனுடைய ஆவியுடன் இடைபட இசைந்திருக்க முடியவில்லை. ஏனென்றால் அந்த மிருகத்தினுடைய ஜீவனுக்குள் ஆத்துமா இல்லை. ஆனால் மனித ஜீவனுக்குள் ஆத்துமா இருக்கின்றதால், எண்ணெய் தண்ணீருடன் கலக்க முடியாததைப் போன்றே அவற்றாலும் கலக்க இயலாதிருந்தது. ஆனால் கிறிஸ்துவானவர் வந்து மரித்தபோதோ, இப்பொழுது கல்வாரியில் சிந்தப்பட்ட கிறிஸ்துவினுடைய இரத்தமானது அந்த இரத்த அணுவுக்குள்ளாக இருந்தது. தேவனுடைய ஜீவனேயன்றி வேறெதுவும் அல்ல. அது புரிகிறதா?
 61. கவனியுங்கள். அதன் பின்னர் ஆராதனை செய்கின்ற ஒருவன் அந்த தகுதிக்குப் பாத்திரமான இரத்தத்துடன் தேவனுக்கு முன்பாக வருகின்ற போது, தகுதிப்படுத்தப்படுகின்றான். அந்த மீட்பரின் இரத்தமே நம்மை மீட்கின்றது. நீங்கள் பாவத்தினால் உங்களை அடகு கடையில் அடகு வைத்திருந்தீர்கள்: ஆதாம் உங்களை அடகு கடையில் இட்டு வைத்திருந்தான். ஆனால் கிறிஸ்து வந்தார். உங்களுடைய மீட்பர் அவர்தான். மேலும் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள். அவர் தம்மை பலியாக செலுத்தியதற்காக, தேவன் உங்களை அன்பின் வெகுமதியாக கிறிஸ்துவுக்கு அளித்தார். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் உங்களுடன் கனிவோடு நயந்து பேசுகிற பரிசுத்த ஆவியானவரால், நீங்கள் கிறிஸ்துவண்டையில் அவருக்கு ஒரு காணிக்கையாக கொண்டுவரப்படுகிறீர்கள். அன்றியும் தேவன் தம்முடைய வெகுமதிகளை நேசிக்கிறார். அவைகள் அழிந்து போவதை அவர் பொறுத்துக் கொள்ளமாட்டார்.
 62. அன்றொரு நாள், ஒரு ஊழியக்காரர் மற்றொருவரிடம் கேட்டார். இப்பொழுது. இதை மன்னியுங்கள். இதில் என்னுடைய சொந்த உபதேசம் சிறிது இதற்குள்ளாக உள்ளது. ஆனால் நாங்கள் அதை எங்களுடைய கூடாரத்தில் செய்வதுண்டு.
 63. இப்பொழுது, அன்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். அவர், "நீர் விசுவாசிக்கின்றீரா... ஒரு மனிதன் முன்பொரு விசை தேவனுடைய பிள்ளையாக இருந்து தேவ ஆவியினால் பிறந்தும், இரத்தத்தால் கழுவப்பட்டு, முழுவதுமாக தேவனால் மீட்கப்பட்டும், இருதயம் புதிதாக்கப்படுதலினாலும், தண்ணீர் முழுக்கினாலும், இரத்தத்தினாலும் வார்த்தையினாலும் தேவனுடைய ஒரு பிள்ளையாகி விடுகிறான் என்று நீர் விசுவாசிக்கவில்லையா? அப்பேற்பட்ட அந்த நபர் பாவம் செய்து தேவனிடமிருந்து அகன்று சென்று இழக்கப்படக் கூடும் என்று நீர் எண்ணவில்லையா?" என்று கேட்டார்.
 64. பேசிக் கொண்டிருந்த அந்த ஊழியக்காரர் மிகச் சிறந்த ஒரு வேதமாணாக்கனாவார். அவர் நீர் என்னுடைய கேள்விக்கு பதிலளிக்கும்போது, நான் உம்முடைய கேள்விக்கு பதிலளிப்பேன். ஒரு மனிதன் மிகவும் நல்லவனாக இருக்கிறான். அதாவது அவன் பொய் சொல்வதோ, திருடுவதோ அல்லது எந்த மோசமான காரியங்களையுமே செய்வதில்லை. ஆனால் அவன் அவ்வளவு நல்லவனாக இருப்பதனால் கிறிஸ்துவுடைய இரத்தம் இல்லாமலேயே, தேவன் அவனை பரலோகத்துக்குள் ஏற்றுக் கொள்வார் என்று நீர் நினைக்கிறீரா?" என்று கேட்டார். இல்லை, நிச்சயமாகவே இல்லை.
 65. நீங்கள் எவ்வளவு நல்லவராக இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல, கர்த்தராகிய இயேசுவினுடைய இரத்தம் இல்லாமல் நீங்கள் பரலோகத்துக்குச் செல்ல இயலாது. அது வெறுமனே சுயமாய் உருவாக்கிக்கொண்ட நீதி மாத்திரமே ஆகும். நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல சுய நீதி பரிசுத்தத்தின் மூலம் நாம் பரத்துக்கு செல்வதில்லை. உங்களுடைய நன்மையினால் நீங்கள் பரலோகத்துக்குச் செல்வதென்பது முற்றிலும் கூடாத காரியமாகும்.
 66. கல்வாரியில் உங்களை கிரயத்துக்கு வாங்கினது தேவனுடைய இரக்கம் தான். நீங்களோ தேவன் கிறிஸ்துவுக்கு அளித்த அன்பின் வெகுமதியாக இருக்கிறீர்கள். மேலும் தேவன் கிறிஸ்துவுக்கு ஒரு - ஒரு வெகுமதியை அளித்திருப்பாரெனில், கிறிஸ்து தம்முடைய வெகுமதியை காத்துக் கொள்கின்றார். "என்னிடத்தில் வருகிற யாவும், பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், அவைகளில் ஒன்றையும் இழந்து போவதில்லை. கடைசி நாளில் நான் அவைகளை எழுப்புவேன்.
 67. இப்பொழுது, நீங்கள் ஒருகால் மனக்கிளர்ச்சியினால் உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம், உங்களுடைய கைகளினூடாக எண்ணெய் வழிந்திருக்கலாம், அல்லது அந்நிய பாஷையில் பேசியிருக்கலாம். அல்லது ஆவியில் நடனமாடியிருக்கலாம் அல்லது ஒரு சபையையோ அல்லது மூட மத வைராக்கியக் கூட்டத்திலோ சேர்ந்திருக்கலாம். அப்படியிருந்தும் நீங்கள் இழக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும். நிச்சயமாகவே அது சரிதான். ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு அளிக்கப்பட்ட தேவனுடைய அன்பின் வெகுமதியாக இருப்பீர்களானால், நீங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றீர்கள்.
 68. இப்பொழுது, உங்களுடைய ஜீவியமானது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை ரூபித்துக் காண்பிக்கும். "அவர்களுடைய கனிகளினாலே அதை அறிவீர்கள். நீங்கள் இனிமையாகவும், தாழ்மையாகவும் மற்றும் அவ்விதமாக நடந்து கொள்வதாக பாவனை செய்ய முயற்சிப்பீர்களானால், நீங்கள் இன்னமும் ராஜ்யத்திற்கு வெளியே தான் இருக்கிறீர்கள். அதுவல்ல... அப்படியானால் அது உங்களுடைய சொந்த கிரியைகளாகவே இருக்கும்.
 69. அங்கு தான் சபையும், ஜனங்களும், சபை என்று அழைக்கப்படுபவையும் மிகவும் பரிதபிக்கப்படத்தக்கதாக தோல்வியுற்றிருக்கின்றன. ஏனென்றால் அவர்களுடைய செயல்களினாலும் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதினாலும் தங்களுடைய சொந்த சுயகிரியைகளே தேவனுடைய நன்மைக்கும் கிருபைக்கும் தகுதிப்படுத்துகின்றதாக அவர்கள் உணருகின்றனர். ஆனால் அதற்கு அதனுடன் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அது தேவனுடைய ஒரு ஈவு ஆகும். நரகத்தை விட்டு நீங்கியிருக்க உங்களுடைய சொந்த மனசாட்சியே உங்களை அவ்வாறு நடக்கச் செய்கின்றது. அதாவது நரகத்தை விட்டு விலகி உங்களை நல்ல ஜீவியம் செய்து சரியாக வாழச்செய்கின்றது. கிறிஸ்தவனல்லாத எந்த ஒரு நற்குடிமகனும் கூட அதைச் செய்வான். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை மறுதலித்திருந்தும் அருமையான ஜனங்களாயி ருந்திருக்கின்ற பல மனிதர்களை நான் கண்டிருக்கின்றேன். அதாவது மனிதத் தன்மையில் அருமையாயிருத்தல்.
 70. யாக்கோபை விட ஏசா எவ்வளவு சிறந்த மனுஷனாயிருந்தான் என்று பாருங்கள். ஆனால் அவன் தன்னுடைய சேஷ்டபுத்திரபாகத்தையே விற்றுப் போட்டான் என்பதை அறிந்துகொள்ள கருத்தற்றவ னாயிருந்தான். காரணம் என்னவென்றால் அவன் அவற்றை அலட்சியம் பண்ணினான். எனவே தேவனுடைய பார்வையில் புறக்கணித்து தள்ளப்பட்டான். அவனோ யாக்கோபை விடவும் மிகச்சிறந்த ஒரு சீமானாகவும் ஒரு அயலானாகவும் ஒரு-ஒரு உழைக்கின்ற மனிதனாகவும் இருந்தான். யாக்கோபு என்னும் அவனுடைய பேரே மோசம்போக்குகிறவன் என்றிருந்தது. மோசம்போக்குகிறவன் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அவன் ஒரு "எத்தன்" ஆவான். ஆகவே... மேலும், ஆனால், ஏசாவோ எல்லா வகையிலும் ஒரு நற்பண்புள்ள மனிதனாக இருந்தான்.
 71. ஆனால் யாக்கோபு அந்த சேஷ்ட புத்திரபாகத்தின் பிரதிபலனை உடையவனாயிருந்தான். மற்றவர்கள் யாரும் அவனை எப்படி அழைத்தாலும், நான் கூறுகின்ற இந்த என்னுடைய சொற்றொடரை மன்னியுங்கள். அவர்கள் அவனை ஒரு "பரிசுத்த உருளை, மத வெறியன்" அல்லது தாங்கள் விரும்பும் என்னவானாலும் அழைத்துக் கொள்ளட்டும், ஆனால் அவன் அந்த சேஷ்டபுத்திர பாகத்தின் மேல் மரியாதையை உடையவனாய் இருந்தான். அவனுடைய முழு நோக்கமே அதுவாகத்தான் இருந்தது. அதற்கு அவன் என்ன விலை கொடுக்க வேண்டியிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, அவனுக்கு அந்த சேஷ்டபுத்திரபாகம் தேவையாயிருந்தது.
 72. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, சபையை கொண்டுவருவதிலும், இப்பொழுது சபையானது வெறுமனே இதை மட்டும் உடையதாயிருந்தால்... கிறிஸ்துவின் சரீரமானது புத்தி சாதுரியமிக்கவர்களாலும், வேத சாஸ்திரத்தாலும், அறிவுப்பூர்வமான புரிந்து கொள்ளுதலினாலும் கட்டுப்படுத்தப் படுமானால், அப்பொழுது நாம் மனிதனுடைய புத்திகூர்மையான அறிவின் மேல் முழுவதுமாக சார்ந்து கொண்டிருக்கின்றோம். நான் அதை தெளிவுபடுத்தி கூறுவேனானால்... சபையானது புத்திசாதுரியத்தை மாத்திரம் ஆதாரமாக கொண்டிருக்குமானால் அல்லது அந்த மனிதன் எவ்வாறு சபையை நிறுவ முடியும் என்றும் பெரிய ஸ்தலங்களை கட்டமுடியும் என்றும் இருக்கைகளுக்கு பூம்பட்டினால் மெத்தைகள் செய்து இடுவதையும், ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இசைக்குழலின் மீதும், அல்லது ஜனங்களை சபைக்குள்ளே வரச்செய்து, சபையில் இணையச் செய்யத்தக்கதாக அவன் எப்படி பிரசங்கம் செய்ய வேண்டும் என்பதன் பேரிலும், சபை புத்தகத்தில் அதிக அங்கத்தினர்களை சேர்ப்பதனால் பரலோகத்தில் மகத்தான காரியம் உண்டாயிருக்கும் போன்ற காரியங்களை மாத்திரம் சார்ந்திருக்குமானால்.
 73. இப்பொழுது. நான் - நான் இதை நீங்கள் ஒருபோதும் நழுவ விடாமல் புரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். நமக்கு மனிதனுடைய அறிவுப்பூர்வமான புரிந்து கொள்ளுதல் மாத்திரம் போதுமெனில் நமக்கு பரிசுத்த ஆவியே தேவையில்லையே. சபையானது அறிவுத்திறனாலும் கல்வித் திட்டத்தாலும், மனுஷரின் புத்திகூர்மையினாலும் நடத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுமானால், நமக்கு பரிசுத்த ஆவி தேவை கிடையாது. மேலும் அது பரிசுத்த ஆவினால் நடத்தப்பட வேண்டுமேயானால் நமக்கு அறிவுகூர்மை தேவையில்லை. ஒன்று இது, அல்லது மற்றது என்பதாக உள்ளது.
 74. இப்பொழுது. மனோதத்துவ உணர்ச்சி வசப்படுதல் இப்பொழுது நாம் மாத்திரம் மனிதன் எவ்வளவு சாமர்த்தியமுள்ளவனாக இருக்க முடியுமோ அவ்வளவு அதிக புத்திசாலியாக இருக்க முடியும், அவன் அதிக கல்வியறிவு பெற்றிருப்போமானால் இன்னும் சிறந்த இலக்கணத்தை அவனால் உபயோகிக்க முடியும். அப்பொழுது சபை இன்னும் சிறப்பானதாக மாறும், ஜனங்களும் இன்னும் சிறந்தவர்களாகி விடுவார்கள் என்போமானால் அவன் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இவ்வாறு கூறுவானானால், "இப்பொழுது நாம் ஒரு மாபெரும் சபையைக் கட்டுவோம். அதை ஒரு குறிப்பிட்ட பெயரிட்டு அழைப்போம். நாம் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் நம்முடைய கோபுரத்தின் மீது மணியோசை எழுப்பி நகரம் முழுவதிலுமுள்ள ஜனங்களின் கவனத்தை கவர்ந்திழுப்போம். நாம் அந்த ஏழைகளுடைய, இழக்கப்பட்ட பாவிகளுடைய, சேரிகளில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்ப்போம்; நாம் சிறந்த உடைகளை அணிந்திருக்கிறதை அவன் பார்க்கும் போது. நம்முடைய ஸ்திரீகள் தங்களுடைய தலைமுடியை அலங்காரம் செய்து கொள்ள முடிவதை அவன் பார்க்கும் போதும், நம்முடைய ஸ்திரீகள் சிகையலங்காரம் செய்து கொள்வதையும், அவர்கள் எப்பேர்ப்பட்ட அருமையான தொப்பியை அணிகிறார்கள் என்பவற்றையும் அந்த ஏழைப் பெண்கள் பார்க்கும்போதும், இவற்றை நாம் அந்த ஜனங்களிடம் காண்பிக்கும் போதும், அந்த பாமரரும் பட்டினியாயுள்ளவர்களும். அப்பொழுது நம், தம்முடைய - நம்முடைய கூட்டங்களுக்கு கடந்து வந்து, இந்த ஸ்திரீகளைப் போலவே காட்சியளிக்கப்பட விரும்புவார்கள், மற்றும் ஆண்களும் நாம் எப்படிப்பட்ட அருமையான முழு ஆடையை அணிகிறோம் என்றும், எவ்வாறு உடுத்துகிறோம் என்றும் பார்ப்பார்கள் மற்றும் எவ்வாறு நாம் எந்த வாகனங்களை ஓட்டுகிறோம், என்ன செய்கிறோம், இந்த நகரத்தின் பொது சமூகத் திறனில் நாம் கிவானிஸ் சங்கம் (Kiwanis) மற்றும் பிற கூட்டுக்குழு சங்கங்களுடன் (clubs) ஒப்பிடுகையில் நாம் எங்கே நிற்கிறோம் என்றும், நாம் இணைந்துகொள்கின்ற காரியங்களையும், அவர்கள் பார்ப்பார்கள்... அப்பொழுது ஏழைகளும் கல்வியறிவில்லாதவர்களும், கடந்து வந்து அவர்களுடைய பிள்ளைகளையும் கொண்டு வந்து கல்வி சுற்றுக் கொள்ளும்படி விரும்புவார்கள். அவ்வாறு அவர்களும் சபை என்று அழைக்கப்படக்கூடிய இந்த மகத்தான சமூக அமைப்புக்குள் ஒரு அங்கத்தினராக முடியும் என்று கூறுவார்களானால், இப்பொழுது. தேவனுடைய திட்டமாக இருந்தால், அவை சரிதான். ஆனால் இயேசு ஒருபோதும் அவ்விதமாக குறிப்பிடவே இல்லை.
 75. இயேசு 'நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார். எனவே உலகத்தின் கல்வியறிவுத் திட்டத்தின் மூலமாக, அது சரி. அது இதை வெளியே தள்ளாத வரையில் அது பரவாயில்லை. ஆனால் மனிதன் புத்தி சாதுரியத்தினாலோ, மதசாஸ்திரத்தினாலோ கிறிஸ்துவண்டை இழுக்கப்படுவதில்லை. பரிசுத்த ஆவி மாத்திரமே தேவனுடைய இழுத்துக்கொள்ளும் வல்லமையாக உள்ளது. அவர்கள் இவ்வுலகத்தின் காரியங்களுக்கு தரித்திரராகும் வரைக்கும் ஏழைகளும் ஒருபோதும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஐசுவரியவான்களும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்து ஐசுவரியமுள்ளவராயிருந்தும், அவருடைய தரித்திரத்தினாலே நாம் ஐசுவரியவான்களாகும்படிக்கு தரித்திரரானாரே. "தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். அவர்களோ அதை தலைகீழாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் அறிவார்ந்த சொற்பொழிவுகளால் மனிதர்களை சபைக்குள் கொண்டுவர முயற்சி செய்கின்றனர். நமக்குத் தேவை புத்திகூர்மை வாய்ந்த சொற்பொழிவுகளல்ல. ஆனால் ஆவியின் வெளிப்படுத்தலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட பரிசுத்த ஆவியின் அபிஷேகமுமே மனிதர்களை சபைக்கு கொண்டு வருவதற்கு நமக்கு தேவையாயுள்ளது. அது இழுத்துக் கொள்ளுகின்ற பரிசுத்த ஆவியின் அபிஷேகமாகும்.
 76. பள்ளிகளும் வேதகலாசாலைகளும் அருமையானவைகளே, அவற்றுக்கெதிராக எனக்கு ஒன்றுமில்லை, ஆனால் அது தேவனுடைய திட்டமாயிருக்கவில்லை. தேவன் பேதைமையுள்ளவர்களையும், கல்லாதவர்களையும், சரிவர பேச முடியாதவர்களையும், தங்களுடைய சொந்த பேரைக் கூட வாசிக்க இயலாதவர்களையுமே தெரிந்து கொண்டார். அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும்" என வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஒரு மிகச்சிறந்த பாடசாலைக்குச் சென்றிருந்தனர். ஏனென்றால் அவர்கள் அலங்கார வாசல் என்னப்பட்ட வாசலண்டையிலே அந்த மனிதனை சொஸ்தமாக்கிய போது. தாங்கள் இயேசுவுடன் இருந்தபோது பெற்றிருந்த அறிவை எடுத்து உபயோகித்தனர். அங்குதான் பாடசாலை உள்ளது.
 77. மேலும் இதற்குள். இன்று அமெரிக்காவிலும். உலகம் முழுவதிலும் நாம் கொண்டிருக்கின்ற அறிவாற்றல் வாய்ந்த சபைகளுக்குள், அவ்வகையான பள்ளி சாலைக்குள் நாம் செல்லுகையில் அப்பொழுது அந்த கிறிஸ்தவன். அந்த விசுவாசி, அந்த சபை அங்கத்தினள், தங்களுடைய வேதாகமத்தை வாசிக்கும் போது, தான் தாழ்மையாக பாலித்து நடக்க முயற்சிக்க வேண்டும் என்றும், அவன் கண்டிப்பாகவே இவ்விதமாய் இருக்க முயற்சிசெய்தாக வேண்டும் என்று பார்க்கிறான். ஆனால், அதை அவ்வாறு செய்யும்போது, அவன் ஒரு மாம்சத்துக்குரிய ஆள்மாறாட்டத்தை மாத்திரமே செய்கிறான். அது ஆழமாக ஊறிச் செல்வதாக ஒரு மாம்சப்பிரகாரமாக ஒப்பிட்டுக் கொள்ளுதல்! அவன் தன் இருதயத்தில் தான் மெய்யாகவே இல்லாத ஒன்றாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறான். தன்னுடைய இருதயத்தில் ஒரு காரியத்தை அவன் சிந்தித்துக் கொண்டு வேறு ஒன்றாக நடிக்க பிரயாகப்படுகின்றான். அதாவது சரியான அசலான மொழி நடையில் கூறினால் அது அவனை ஒரு மாயக்காரனாக்குகின்றது.
 78. இயேசு சொன்னார் 'மாயக்காரரே, நீங்கள் நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்' என்றார். உங்களுடைய இருதயத்தில் உள்ளபடி நீங்கள் பேசவில்லையெனில் உங்களுடைய இருதயம் ஒன்றை' சிந்தித்தும், நீங்கள் வேறொன்றை பேசுவீர்களானால், அது உங்களை ஒரு மாயக்காரனாக்குகின்றது.
 79. பரிசேயன் என்ற வார்த்தையின் சரியான அர்த்தமே "நடிகன்" என்பதாயுள்ளது. அவர்கள் தங்களுடைய மத மார்க்கத்தை நடித்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு ஒரு கல்லான இருதயமே உண்டாயிருந்தது. அவர்கள் வந்து இவ்வாறு கேட்டனர். "நல்ல போதகரே, நீர் உம்மை யாரென்று கூறிவீரோ அதை நிரூபிக்கும்படி உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்" என்றார்கள்.
 80. அவரோ "தீங்கள் என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே" என்றார். அவர் "இந்த பலவீன விபச்சார சந்ததியார் இதைத் தேடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுக்கப்படும். யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்" என்றார்.
 81. இப்பொழுது பெந்தெகொஸ்தேவில் காட்சியளிக்கப்பட்ட, தேவன் சபையுடன் கொண்டிருந்த இந்த புதிய ஈடுபாட்டு முறையை இந்த புதிய திட்டத்தை ஒழுங்குபடுத்த முயற்சிக்கும் போது, அது அறிவுத்திறன் வாய்ந்ததாக இருக்கவேயில்லை. ஆனால் நூற்றிருபது பேர் (மீன்பிடிப்பவர்களும். கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகளும், மேலும் குடும்பஸ்திரீகளும்) மேல்வீட்டறைக்குச் சென்று தேவனுடைய தீர்க்கதரிசனம் நிறைவேறும் வரையிலும் காத்திருந்து பரிசுத்த ஆலியின் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொண்டனர்.
 82. இயேசு கூறினார் 'உங்களுடைய பிரசங்கத்தை நிறுத்தி வையுங்கள். இதற்கு மேற்கொண்டு செல்ல வேண்டாம். அதைக் குறித்து மேற்படி எதுவும் செய்யாதீர்கள். ஆனால் உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும், அது வரையிலும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்" என்றார்.
 83. "நீங்கள் உங்களுடைய இளங்கலை பட்டம் அல்லது தெய்வீக டாக்டர் பட்டம் அல்லது எதுவாயிருப்பினும், அதைப்பெறும் வரை என்றோ, உங்களுடைய தத்துவ டாக்டர் பட்டம், மனோதத்துவ டாக்டர் பட்டம் பெறும் வரையிலும் என்றோ கூறவில்லை. மேலும் நீங்கள் அறிவார்ந்த போதகராகும் வரை என்றோ அல்லது உங்களுடைய கல்லூரிச் சான்றிதழைப் பெறும் வரையிலும் காத்திருங்கள் என்றோ" கூறவில்லை, "நீங்கள் பட்டப்படிப்பு தேர்ச்சிபெறும் வரையில் காத்திருங்கள்" என்றும் கூறவில்லை.
 84. ஆனால் "உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும்" பள்ளி சாலையில் இருந்தல்ல, ஆனால் "உன்னதத்திலிருந்து, பின்பு நீங்கள் எருசலேமிலும் யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்றார்.
 85. "உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். மேலும் (ஆங்கில வேதாகமத்தில் and என்று எழுதப்பட்டு அடுத்த வசனம் தொடங்குகிறது: தமிழாக்கியோன்) அது ஒரு இணைப்புச்சொல்லாகும். "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; அல்லது சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அல்லது சர்ப்பங்களை எடுத்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்களானால் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்பதுதான் அவருடைய கடைசி கட்டளையாகும். ஒரு விசுவாசியுடைய அடையாளம் அதற்கொத்ததாக இருக்க வேண்டுமேயல்லாமல் படிப்பறிவோ, அறிவுத்திறனோ அல்ல, ஏனென்றால் அறிவுத்திறன் வாய்ந்தோரால் அதை உண்டுபண்ண முடியாது.
 86. இப்பொழுது நாம் காண்கிறோம், பின்பு, எடுக்கும்படியாக... அவர் ஒரு புதிய சபையை உருவாக்கவிருந்தார்... அவர் அதை விரும்பவில்லை...உங்களால் பழைய சபையை தேய்த்து மெருகேற்ற முடியாது. நீங்கள் வெறுமனே அதற்கு ஒப்பனை செய்து மேம்படுத்துதலை மட்டும் கொடுப்பது எந்த நன்மையும் உண்டாக்குவதில்லை. அது ஒரு நவமான இருதயமாகும். "நான் பழைய இருதயத்தை எடுத்து போடுவேன்" என்பதாகும். "நீங்கள் அதை எடுத்து விடுவீர்கள் என்றல்ல. ஆனால் "நான் அதை எடுத்துப்போடுவேன்" என்பதாக உள்ளது. உங்களால் அதன் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதா? "நான் அதைச் செய்வேன் அது ஒரு கிருபையின் செயலாக இருக்கிறது.
 87. நித்திய பாதுகாப்பை பிரசங்கித்து உலகத்தைப் போன்று நடந்துகொள்கின்ற பாப்டிஸ்டு ஜனங்களே. பிரஸ்பிடேரியன்களே; உங்களுக்கு வெட்கக்கேடு! நீங்கள் என்ன பிரசங்கிக்கிறீர்கள்? நிச்சயமாகவே
 88. "நான் அந்த பழைய கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு ஒரு சதையான இருதயத்தைக் கொடுப்பேன்" இப்பொழுது உற்றுக் கவனியுங்கள். "நான் அதைச் செய்வேன்" என்றார் அவர். அந்த பழைய அறிவுப்பூர்வமான சபையில் உங்களால் அதை வைக்க முடியாதிருந்தால், அதைப் பேச முடியாதிருந்தால்,
 89. அக்காரணத்தால் தான் அமெரிக்கா இன்றுள்ள இந்த நிலைமையில் இருக்கிறது. ஏனென்றால் அது அந்த பழைய அறிவார்ந்த கருத்துக்களால் கடினப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தான், அது, வரப்போகின்ற, ஒரு சிறிய ஹாலிவுட் எழுப்புதலுக்கும் கூட, அவ்வாறு சென்று, ஒவ்வொரு நபர்களும் காகிதத்தில் கையொப்பமிடுதல் போன்றவற்றை செய்ய வேண்டியிருக்கிறது. கவர்ச்சியான இளம் பெண்கள், இளைஞர்கள் போன்றோரும் மற்றும் யாவரும் வெளியே வந்து ஒரு சிறிய நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மேலும் அவர்கள் கடந்து போய், பிறகு தாங்கள் திரும்பிச்சென்று பார்க்கையில், கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதத்தினர் அதன்பின் அங்கே இருப்பதில்லை என்பதைக் காண்கின்றனர்.
 90. காரியம் என்னவாயிருக்கிறது? அது ஒரு எழுப்புதலே அல்ல. அது ஒரு அறிவுப்பூர்வமான மாயத்தோற்றமாகும். அது சரியே. மேலும்- மேலும் அது ஒரு ஹாலி... ஒரு தொலைக்காட்சி கட்டுரை போன்ற ஏதோவொன்றை அமெரிக்க ஜனங்கள் மதிகெட்டு, தங்கள் கைகளை தட்டத்தக்கவாறு ஏதோவொன்றை மாத்திரமே அது அளித்திருக்கின்றது. நாம் அதை ஒரு-ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மாற்றி விட்டோம். பிரசங்க பீடமானது ஹாலிவுட் நவநாகரீக பெட்டிக்குள் ஒரு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அந்த பண்டைய-நாகரீகம் கொண்ட கவிசேஷ பிரசங்கி, தொட்டித் தண்ணீரை குடித்துக் கொண்டு, இரவு நேரம் முழுவதும் ஒரு விளக்கு வெளிச்சத்தில் பிரசங்கித்த காலங்கள் அது மாறிவிட்டது. ஆனால் நாம் அதை விட்டதால்தான், அறிவுப்பூர்வமான குழுவினரை நாம் கொண்டுள்ளோம்.
 91. ஒவ்வொரு வீட்டிலும் லூசியை நேசிப்பது யார் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுக்கொண்டும், மேலும் இந்த மற்ற எல்லா தேவபக்தியற்ற நிகழ்ச்சிகள் வானொலி மூலமாகவும் தொலைக்காட்சியிலும் பரப்பப்படுகின்ற இத்தகைய காலத்தில், அதற்குள்ளாக உங்களால் எங்ஙனம், நாம் எவ்வாறு கிறிஸ்து கூறினவிதமாக இந்த புதிய சுவிசேஷத்தை பிரசங்கிக்க போகிறோம். சிந்தையானது. மாம்சத்துக்குரியதாகவே இருக்குமானால், அது விசித்திரக்கட்டுக் கதையினூடாகவும் மூட மத வைராக்கியத்திற்குள்ளாகவும் செல்லும் தேவனுடைய வார்த்தையை விட்டகன்று எண்ணெய் சொரிதல் மற்றும் அதைப்போன்ற எல்லா வகை காரியங்களுக்குள்ளும் நுழைந்தேறும். இப்பொழுது நீங்கள் அதை எப்படி தடுத்து நிறுத்தப் போகின்றீர்கள்? அது அந்த விதமாகத்தான் இருக்கும் என வேதம் கூறியுள்ளது. ஆகையால் உங்களால் அதை நிறுத்த முடியாது, சரிதான். அது அந்த விதமாகவே இருக்கும் என்று தேவன் கூறியுள்ளார். நாம் இப்பொழுது எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?
 92. புத்திசாதுரியமிக்கவர்கள்! ஒரு கிழவிக்கு முக ஒப்பனையலங்காரம் அவர்கள் செய்கின்றனர்; அவள் இன்னுமாக அதே கிழவியாகவே இருக்கின்றாள். ஒரு கிழவனுக்கு அவர்கள் முக ஒப்பனை அலங்காரம் செய்கின்றனர்; அவன் இன்னுமாக வெறுமனே அதே கிழவனாகவே இருக்கின்றான். "நான் புத்தாண்டு தினத்தன்று அன்று எனது புதிய பக்கத்தைப் புரட்டி, புது வாழ்க்கையை தொடங்குவேன். நான் என்னுடைய புகைபிடிக்கும் குழாயை எறிந்து விடுவேன்" என்று கூறி, மறுநாளே அதை எடுத்துக் கொள்கின்றனர். புரிகிறதா? நீங்கள் வெறுமனே அவ்விதமாகவே இருக்கிறீர்கள். ஒரு முக ஒப்பனையலங்கார காரியமல்ல: அது ஒரு பிறப்பாகும். அது தான் சபைக்கு தேவைப்படுவதாயிருக்கிறது.
 93. இப்பொழுது இதை நீங்கள் அந்த பழைய சபையில் பிரசங்கிக்க முடியாது. அவளால் அதை சகித்துக்கொள்ள இயலாது. இயேசு அதை லூக்கா 5-ஆம் அதிகாரத்தில், துருத்திகளிலுள்ள திராட்சரசத்தைக் குறித்து கூறியுள்ளார். அவர் "உங்களால் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்க முடியாது. வார்த்துவைத்தால், அவை கெட்டுப்போம்" என்றார்.
 94. என்னை அது ஆச்சரியப்பட வைத்ததுண்டு. ஒரு துருத்தி (bottle குடுவை: தமிழாக்கியோன்) எப்படி கெட்டுப்போம்?" என்பதை நான் சிந்தித்துப்பார்க்கையில் என்னுடைய - என்னுடைய சிறு பிள்ளைத்தனமான மனதை அது வியப்புறச் செய்ததுண்டு. நாம் அழைக்கின்ற குடுவை பழையதாவதால், அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை, ஏனென்றால் அது கண்ணாடிக் குவளையாக உள்ளது.
 95. ஆனால், இயேசுவின் காலத்தில், அவர் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் என்றால், அன்று அவர்கள் பயன்படுத்தியிருந்தது. ஒரு மிருகத்தின் தோலினால் உண்டாக்கப்பட்டதாகும். அதாவது ஒரு மிருகத்தின் தோல் பதனிடப்பட்டிருந்தது. மேலும் அந்த மிருகத்தோலானது பழையதாகும் போது. ஏன்... அது புதிதாகவும், முதிர்ச்சியடையாததாகவும், அண்மையில் பதனிடப்பட்டிருந்ததாகவும் இருக்கையில், அது வளைந்து நெகிழும் தன்மையுடையதாயிருக்கிறது. ஆனால் அது பழையதாகும் போதோ உலர்ந்து வறண்டு விடுகின்றது. இப்பொழுது, ஒரு தோல் உலர்ந்த பின் எவ்வாறு இருக்கும் என்று ஜனங்களாகிய உங்களில் சிலருக்கு தெரியும். அது பழையதாகி உலர்ந்து போன பின்பு, முழுவதுமாக சுருக்கமடைந்து மிகவும் கடினமானதாக ஆகிவிடுகின்றது. இப்பொழுது அதில் புது ரசத்தை நீங்கள் வார்ப்பீர்களானால், அதற்குள் எந்த ஒரு ஜீவனும் இல்லாததால், அது வெடித்து சிதறிவிடும்.
 96. அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை உண்மையாகவே அசலான உயிர்த்தெழுந்த அந்த - அந்த வல்லமையுடன் பிரசிங்கிக்கும்படி பிரயாசிப்பதைப் போன்றே உள்ளது. அதை ஜனங்களுக்கு முன்பாக எடுத்துரைக்க பிரயாசிப்பதைப் போன்றே உள்ளது. நீங்கள் அதைச் செய்யும்போது, அதை அதனுள்ளே வார்க்கும்போது என்ன சம்பவிக்கின்றது? புது திராட்சரசத்தில் ஜீவன் உள்ளது. மேலும் அந்த புது திராட்சரசமானது இன்னமும் புளித்து நொதித்துக் கொண்டேயிருக்கின்றது. ஓ. நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன். அந்த புதிய ஜீவனானது பொங்கிக் கொண்டிருக்கிறது.
 97. புது திராட்சரசம் இன்னும் புளித்து பொங்கிக் கொண்டே யிருக்கின்றது. அது ஒரு ஒரு புதிய நெகிழ்வான துருத்தியில் வார்க்கப்படுமானால், அந்த மிருகத்தின் எண்ணைய் இன்னுமாக அந்தத் தோலில் உள்ளதால், புது ரசம் உந்தித் தள்ளுகையில் அந்த தோலானது விரிந்து கொடுக்கும்.
 98. வேறு விதத்தில் கூறினால் வேதாகமம் "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று கூறும் போது அந்த புதிய தோலானது 'ஆமென்' என்று கூறி விரிந்து கொடுக்கும். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உனக்குள் கிரியை செய்து கொண்டிருக்கும் தேவனுடைய ஜீவன் நானே என புது திராட்சரசம் கூறுகையில், புதிய தோலானது ஆமென்" என்று கூறி அதற்கு விரிந்து கொடுக்கும். புது திராட்சரசம் "இன்று நம்முடைய சுகமளித்தலுக்கு பரிசுத்த ஆவியானவர் போதுமானவராயிருக்கிறார்' என்று கூறும் போது புது திராட்சரசம் தன்னையே விரித்து கொடுக்கும். திராட்சரசம் வார்த்தையாக இருப்பதால், அது அவ்வாறு கூறும்போது. புது துருத்தியானது அதற்கு விரித்து கொடுத்து "ஆமென்" என்று சொல்லும்,
 99. ஆனால் பழைய சரீரம் என்ன செய்யும்? "அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்று முடிவடைந்து விட்டது என்னும், அப்படியானால், நாம் செய்து கொண்டிருப்பது என்ன? நாம் எதை சாதித்துக் கொண்டிருக்கிறோம்? நாம். அவர், "பழந்துருத்தி கெட்டுப்போம், இரசமும் அதனுடன் அழித்துவிடும்" என்றார். அது ஏறக்குறைய உங்களுடைய முத்துகளை பன்றியின் முன் போடுவதைப் போன்றதாகும். போட்டால் அவை திரும்பிக்கொண்டு தங்கள் கால்களால் மிதித்துப்போடும். நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்களா?
 100. இப்பொழுது. கிறிஸ்து தன்னிடத்திற்கு வெறுமையாய் திரும்பும்படிக்கு கவிசேஷத்தை பிரசங்கிக்க ஊழியக்காரர்களை அபிஷேகிப்பதில்லை. ஆனால், நீங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே அவர் எதிர்பார்க்கிறார். மேலும் வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்போது. ஆயத்தமாயிருங்கள், நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த பழைய பகத்தோலை களைந்து போட்டுவிட்டு அதற்கு பதிலாக தேவனுடைய வார்த்தைக்கு வளைந்து கொடுக்கும் நெகிழ்வான செம்மறியாட்டுத் தோலுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். வேதாகமம் கூறுகின்ற ஒவ்வொன்றிற்கும், நீங்கள் "ஆமென்" என்பீர்கள். ஆனால் அது நிச்சயமாகவே வேதாகமத்திலிருந்து வந்தாக வேண்டும்.
 101. ஏனெனில் புது திராட்சரசம் மாத்திரமே ரசத்தை பொங்கச் செய்கின்றது அது அதற்குள் இருக்கின்ற அந்த - அந்த தனிம மூலக்கூறுகள் உண்டென்பதை உறுதி செய்கின்றது. அந்த நுரைமம் (ஈஸ்ட் - தமிழாக்கியோன்) மதுச்சத்தினுடைய குமிழை உந்தித்தள்ள மட்டுமே செய்கின்றது. அது அதை ஒரு உடைக்கப்படும் வரிசைக் கிரமத்திற்கு உள்ளாக்குகின்றது. அந்த ஈஸ்ட் நுரைமம் இச்சிறு மதுக்குமிழியை உடைத்து வெடிக்கச் செய்கையில், இன்னமும் கூடுதல் பரிபூரணமாகின்றது. அதற்கு சிறந்த சுவையைக் கொடுக்கவும் நீண்ட நாள் சிறப்பாக நீடித்திருக்கவும், அதை அதிக கிளர்ச்சிமிக்கதாகவும் புளிப்பற்றதாகவும் ஆக்குகின்றது.ஆமென்.
 102. மேலும், தன் குமிழியை உடைத்து தன்னுடைய மதுவின் எழுச்சியை பரப்பும்படி முயன்று கொண்டிருக்கிற அந்த புது திராட்சரசத் தன்டையில் மனித சுபாவத்தின் அம்சத்தின், புளித்தமா கொண்டு வரப்படுமானால், அப்படிப்பட்ட எல்லாவித உலகத்தின் அம்சத்தையும் அது சபையிலிருந்து உந்தித்தள்ளி அகற்றி, பாதுகாக்கின்றது.
 103. திராட்சப் பழச்சாறு இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் புளித்து விடும், ஆனால் திராட்சரசமோ ஒருபோதும் புளிக்காது, காரணம் என்னவென்றால், அந்த திராட்சரசத்தினுள் ஜீவக்கிருமி உள்ளது. அது நொதித்து பொங்கிக் கொண்டும். உந்தித்தள்ளிக்கொண்டும், கிருமிநாசனம் செய்துகொண்டும் இருக்கின்றது. அது பழையதாகும் தோறும் அதற்கு இன்னும் அதிகமாக மெருகேறிக் கொண்டேயிருக்கின்றது.
 104. புது திராட்சரசத்தை, புதிய பெந்தெகொஸ்தே துருத்தியில் மாத்திரமே வார்க்க முடியும். மேல் வீட்டறையில் கூடியிருந்த நூற்றிருபது துருத்திகளை தேவன் கொண்டிருந்தார்; அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டு எண்ணெய் பூசி, மிருதுவாக்கி, புதுப்பித்து, அவைகளிலிருந்த அந்த எல்லா பழைய ஆசாரவிறைப்புத் தன்மையையும், பழைய முறைமைகளையும் வெளியே எடுத்துப் போட்டார். பின்பு, நூற்றிருபது துருத்திகள் மேல்வீட்டறையில் வைக்கப்பட்டு, அவற்றின் கழுத்துகளை மேல் நோக்கியவாறு, அதன் மேல் ஒரு புனல் வைக்கப்பட்டவர்களாக தேவன் உடையவராயிருந்தார்.
 105. அன்றியும் பரிசுத்த ஆவியானவர் மழையாய் பொழிந்தபோதோ, இந்த துருத்திகள் வெளியே ஓடி, இடம் விட்டு இடம் குதித்தெழுந்து, சுவிசேஷத்தை பிரசங்கிக்க தொடங்கும் வரைக்குமாக அவ்வளவாய் ஜீவனைப் பெற்றனர். மேலும் ஒருவன் ஒரு மரக்கட்டையின் மீது தாவி குதித்து, "இது அதுவே" என சரியாக வார்த்தையுடன் திரும்பினான்.
 "தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது." 'கடைசி நாட்களில் நான் என் புதிய சரீரங்களுக்குள், என் புது திராட்சரசத்தை, என் ஆவியை ஊற்றுவேன்' என்று தேவன் உரைத்திருக்கிறார்" என்றான். அவர்களுக்கு என்னே ஒரு எழுப்புதல் உண்டாயிருந்தது! அதுதான் தேவனுடைய ஒழுங்கு கிரமம் ஆகும்.
 106. இதோ அவைகளில் இரண்டு துருத்திகள் உடைத்து வெடித்துக் கொண்டவாறு வருகின்றனர். அங்கே துயரப்பட்ட ஒரு மனிதன் கிடத்தப்பட்டிருந்தான். துன்பத்திலிருந்த இந்த மனுஷன் அவர்களில் ஒருவனுடைய கையைத் தொட்டபோது, ஏன், அவனுடைய துயரம் அவரை விட்டு நீங்கிற்று. அவனும் அதில் கொஞ்சம் பெற்றுக் கொண்டவனாய் குதித்து எழுந்து தேவனை துதிக்கத் தொடங்கி, சத்தமிட்டு கொண்டும், தேவனை மகிமைப் படுத்திக்கொண்டும் தேவாலயத்துக்குள்ளே ஓடினான்.
 107. அதுதான் தேவனுடைய ஒழுங்கு கிரமமாக இருக்கிறது; ஒரு பட்டத்துடன் கூடிய பெரிய ஒரு பள்ளி சாலையல்ல, ஆனால் வாழ்ந்து, செயல்படுகின்ற பரிசுத்த ஆவியின் ஒரு அனுபவமாக உள்ளது. மூட பத்தி வைராக்கியமான ஒன்றல்ல, ஆனால் அசலான, உண்மையான பரிசுத்த ஆவி செயலில் உள்ளதாகும். நீங்கள் அதை காண்பீர்களாக என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது.
 108. இப்பொழுது அவ்வேதவசனத்தின் வரிசைக்கிரமத்தை கவனித்துப் பாருங்கள். அது பரிபூரணமாயுள்ளது. தேவன் "முதலாவது. நான் கல்லான இருதயத்தை எடுத்துப் போடுவேன்; நீங்கள் ஒன்றையும் ஏற்றுக்கொள்ள முடியாதே. பின்பு" என்றார், அவர் கூறினார், "ஒரு புதிதான ஆவியைக் கொடுப்பேன்" என்றார். இப்பொழுது, அது பரிசுத்த ஆவி அல்ல.
 109. அங்கே தான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. பலர் சொல்லப்போனால் அநேக ஜனங்கள், ஜெபிக்கும்படி பலிபீடத்தண்டை வருகின்றனர். அங்கே ஜெபிக்கும்படி வந்து, ஜெபிக்கையில் சிறிது நல்ல உணர்வை பெறுகின்றனர். அவர்கள் எழுந்து தொடர்ந்து செல்லுகின்றனர். பின்பு சில காலம் அங்குமிங்கும் குதிக்கின்றனர். அதன் பின்னர் சிறிது கழித்து அவர்கள் குதித்து, குதித்து, குதித்து. ?... மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவர்கள் ஒருபோதும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளவேயில்லை. அவர்கள் எவ்வளவு குதித்தாலும் அல்லது எவ்வளவு அதிகமாக கூச்சலிட்டாலும், அல்லது எவ்வளவு அதிகமாய்.. .தங்களுடைய கைகளிலிருந்து எண்ணெய் சொரிந்தாலும், அல்லது தங்களுடைய முகத்தில் இரத்தம் வடிந்தாலும் அல்லது அவர்கள் எவ்வளவு அந்நிய பாஷைகளில் பேசினாலும், அல்லது அவர்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அல்லது-அல்லது அவர்கள் என்ன செய்தாலும், அது ஒரு பொருட்டே அல்ல. அதற்கு அதனுடன் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அது மனித உணர்ச்சிவசப்படுதல்கள் மாத்திரமே ஆகும். அவர்கள் ஒரு புதிய ஆவியை பெற்றுக் கொண்டனர். அதைக் கொண்டு களிகூருகின்றனர்.
 110. நான் சிலவற்றை கூறப்போகின்றேன். அது ஆழமாக பதிய வேண்டும் என விரும்புகிறேன். தேவன் உதவி செய்வாராக. பரிசுத்த ஆவியின் சபை என்று அழைக்கப்படுகின்ற அதற்கு ஒரு உணர்ச்சிவசப்படுதலின் பக்கம் ஒன்று உள்ளது. அவர்கள் வார்த்தையை அசட்டை செய்வதனால் மூட மத வைராக்கியத்திற்கு அநேக கட்டமைப்புகளை கொண்டிருந்து அதனண்டை ஓடிச் செல்கின்றனர். அவர்கள் ஓடிச் சென்று'ஓ. எங்களுக்கு ஒரு மகத்தான கூட்டம் உண்டாயிருந்தது! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!" என்று மாத்திரம் கூவுகின்றனர். இப்பொழுது, நீங்கள் அப்படிச் செய்தும், ஆவியின் கனியைக் கொடாதிருந்தால்... அப்படியானால் நீங்கள் புதிய ஆவியில் இருக்கிறீர்கள். நீங்கள் முன்பு அவ்வாறு செய்திருந்ததில்லை, அது சரிதான். ஆனால் தேவன் உங்களுக்கு ஒரு புதிய ஆவியை கொடுக்க வேண்டியதாயிருந்தது. ஏன், முன்பு உங்களுக்கிருந்த ஆவியால், உங்களுடனேயே ஒத்துப்போக கூடாதிருந்தது, பின்பு எவ்வாறு தேவனுடன் ஒத்துப்போக போகிறீர்கள்?
 111. ஆகையால், தேவன் உங்களுக்கு ஒரு நவமான இருதயத்தை கொடுக்க வேண்டியிருந்ததேயல்லாமல், ஒட்டு போடப்பட்டு, சரி செய்யப்பட்ட ஒன்றையல்ல. ஒரு நவமான இருதயம்; நீங்கள் சிந்திக்க கூடிய மன அறிவுத்திறன் அதுதான், ஒரு புதிய விதத்தில் சிந்தித்தல், அப்பொழுது அவர் ஒரு புதிய சிந்திக்கும்படியான வழியை கொடுக்கும்போது, "ஆம், அது சரிதான் வேதாகமம் அர்த்தமுள்ளதாகத் தான் காணப்படுகிறது. முன்பு நான் அதை விசுவாசிக்கவில்லை, இப்பொழுது அதை நான் விசுவாசிக்கிறேன்." என்பீர்கள். இப்பொழுது, அதுவே உங்களுடைய மகத்தான எழுப்புதலாக உள்ளது. புரிகிறதா? அவர்கள் "ஆமாம், நிச்சயமாகவே, நான் நரகத்திற்கு போக விரும்பவில்லை. நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்பர். அது சரிதான். அது நல்லதே. அதுதான் உன்னுடைய முதற்படியாகும்.
 பின்பு அவர், அதன் பிற்பாடு, "பின்பு, நான் உங்களுக்கு ஒரு புதிய ஆவியைக் கொடுப்பேன்" என்றார்.
 அது என்னவாயிருக்கிறது? "நான் சரியானதைச் செய்ய விரும்புகிறேன்" என்ற ஒரு புது வாஞ்சை.
 112. "இப்பொழுது, நான் ஒரு கிறிஸ்தவன் என்பதை அறிவேன். நான் இதை செய்தாக வேண்டும்... நான் ஒரே ஒரு முறை மட்டும் புகை பிடித்து விட்டு, தூரே எறிந்து விடுவேன்" பாருங்கள்? "நான் - நான் - நான் சற்றே பார்க்கட்டும், நான்-நான்-நான் சற்றே இன்றிரவு வீட்டிலிருந்து. கொள்கிறேனே. நான் வெறுமனே..." என்பார்கள். இந்த எல்லா சிறு 'சற்றே. வெறுமனே" என்பவைகள் தான், அது சரியே, ஏவாள் சற்றே ஒரு கணப்பொழுது மாத்திரமே நின்றாள். அவள் செய்ய வேண்டியிருந்ததெல்லாம் அவ்வளவுதான்.
 ஆனால், இப்பொழுது, அதுதான் புதிய ஆவியாயிருக்கிறது.
 113. அதன் பின், அவ்வேதவசனத்தின் வரிசைக்கிரமத்தை கவனியுங்கள். அவர் ஒரு நவமான இருதயத்தையும், ஒரு புதிய ஆவியையும் கொடுத்த பின்னர், அவர் "பின்பு, என் ஆவியை வைப்பேன்" என்றார். இப்பொழுது என்னவாயுள்ளது? இங்கே வேதவாக்கியம் அதைத்தான் கூறுகின்றது. அதுதான் வரிசைக்கிரமம். வேதவசனத்தின் எண் எண்ணியல் வரிசைக்கிரமமாக உள்ளது, "ஒரு நவமான இருதயம்: ஒரு புதிய ஆவி; அதன் பின் என்னுடைய ஆவி." அப்பொழுதுதான் தேவனுடைய பரிசுத்த ஆவி...
 114. உங்களுக்குள் அவர் வைத்த தேவனுடைய நவமான இருதயமானது. சரியாக உங்களுடைய மத்திய பாகத்தில் அமைந்துள்ளது. அதுதான் உங்களுடைய-உங்களுடைய மனத்தூண்டுதல் ஆகும். நீங்கள் - நீங்கள்... உங்கள் - உங்களுடைய உணர்ச்சிகள் வெளியேற்றப்படுவது அங்குதான். அந்த புதிய ஆவியோ, சரியாக அந்த நவமான இருதயத்தின் மத்திய பாகத்தில் அமைகின்றது. மேலும் தேவனுடைய ஆவியாகிய, பரிசுத்த ஆவி, உங்களுடைய புதிய ஆவியின் சரியாக மையப்புள்ளியில் அமர்கின்றது. பின்பு. அங்கே, அதுதான் உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகின்றது.
 115. அது ஒரு புகழ்வாய்ந்த கடிகாரத்தின் பிரதான விற்சுருளைப் (main spring) போன்றேயுள்ளது. மேலும் அது தானாகவே திருகும் அமைப்புடைய கடிகார வகையைச் சார்ந்தது. நீங்கள் அதை ஒவ்வொரு நாளும் திருக வேண்டியதில்லை. தேவன் என்றென்றைக்குமாக ஒரே முறை திருகிச்சுற்றி விட்டுவிட்டார். மேலும் அது உங்கள்-உங்களுடைய ஜீவியத்தின், உங்கள் புதிய ஜீவியத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிகாரத்தின் பிரதான வில்கருள் இலகுவாகி நகர ஆரம்பிக்கையில், பரிபூரண நேரத்தை காட்டும் படி. அக்கடிகாரத்திலுள்ள ஒவ்வொரு சிறு அங்க அமைப்புகளையும் அது கட்டுப்படுத்துகின்றது.
 116. அன்றியும், பரிசுத்த ஆவியை வைக்கும் போது..புது கல்லூரிப் பட்டத்தை அல்ல, புதிய சபையை அல்ல, புதிய சிந்தனை அல்ல, புதிய உணர்ச்சிவசப்படுவதை அல்ல, புதிய எண்ணெயை அல்ல, புதிய நடனத்தை அல்ல, புதிய உதடுகளை அல்ல, புதிய அந்நிய பாஷையை அல்ல, புதிய இதை அல்ல. புதிய அதை அல்ல! ஆனால், தேவன் தம்முடைய ஆவியை உங்களுடைய புதிய ஆவியின் மையத்தில் வைக்கும் போது. நீங்கள் சாந்தமாக இருப்பதைப் போன்று பாவனை செய்ய வேண்டியிராது. நீங்கள் ஒரு கிறிஸ்தவனைப் போன்று பாவிக்க வேண்டியதில்லை. அது உங்களுக்குள்ளிருக்கும். யாவற்றையும் அடக்கியாளுகின்றது. அது உங்களை நல்லொழுக்கமுள்ளவர்களாக ஆக்குகிறது. சபையை கிரமத்தில் இயங்கச்செய்கின்றது. வரங்களை பரிபூரணமாக கிரியை செய்யவைக்கின்றது. அல்லாமலும், நீங்கள் இருக்க வேண்டும் என்று எண்ணுகிற ஒரு இடத்திலிருந்து உங்களை எடுத்து, வேறு எங்கோவோரிடத்தில் வைக்கப்பட வேண்டுமாயினும், அது உங்களை கட்டுப்படுத்துகின்றது.
 117. "நான் இனி ஒருக்காலும் திரும்பி வர மாட்டேன்" என்று கூறி உடனடியாக திரும்பி விடுவது அல்ல. இல்லை ஐயா. அது அந்த கடிகாரத்தின் பிரதான வில்சுருள் அங்கே இல்லை என்பதையே காட்டுகிறது. சம்பவிக்கின்ற ஒவ்வொரு சிறு காரியங்களுக்கும் நீங்கள் கடும் சீற்றம் கொள்வீர்களானால், அது அந்த மனநிலையை நச்சு படுத்தி கெடுத்துவிடும்: மேலும் மேய்ப்பன் வார்த்தையில் இருக்கின்ற ஏதோவொரு விஷயத்தை எடுத்துக்கூறும்போது. நீங்கள், அதற்கு "(சகோதரன் பிரன்ஹாம் துப்புகின்றது போன்ற ஒரு சத்தத்தை எழுப்புகிறார்) பாருங்கள், நான் அதை விசுவாசிப்பதில்லை." என்பீர்களானால், அந்த பழைய பசுத்தோலை கவனியுங்கள். புரிகிறதா? கவனித்துப் பாருங்கள். புதிய பிரதான வில்சுருளானது அங்கே இன்னமும் சரியாக பொருத்தப்படவில்லை.
 118. ஆனால், அது கட்டுப்படுத்தி இயக்குகின்றது. அது உங்களை விசுவாசிக்கும்படி செய்கின்றது. நீங்கள் உப்பாக மாறும் வரைக்கும் அது உங்களை அவ்வாறு நடக்கச்செய்கின்றது. பிறகு முழு உலகமும் உங்களைப் போன்று இருக்கும்படிக்கு தாகம் கொள்ளும். அதுதான் உங்களுடைய ஆவியின் மத்தியில் அமர்ந்திருக்கின்ற பரிசுத்த ஆவியாகும். அதுவே கடிகாரத்தின் பிரதான வில்சுருளாக உள்ளது. அதன்பின் நீங்கள் பூட்டப் பட்டிருக்கின்ற நுகம் அதுவேயாகும்.
 119. "ஓ, இன்றிரவு நான் சபைக்கு செல்ல சற்றே வெறுப்படைகிறேன். நான் போகவில்லை...மேலும், அந்த பிரசங்கி சலிப்படைகிறவரைக்கும் நீண்ட நேரம் பேசாதிருப்பாரானால், சில நிமிடங்கள் அவர் பேசுவதை கேட்க விரும்புவேன். ஆனால் நான் உன்னிடம் சொல்லட்டுமா, கடந்த
 முறை நான் அங்கே சென்றதற்கு பின்பு, அந்த சீட்டாட்டக்குழு விருந்துக்கு சென்ற போது. சூசி என்னிடம் 'சந்தோஷத்தை அநுபவிப்பதை (hair down) விட்டுவிட்டு உன்னையே சிறுமைப்படுத்திக் கொள்வாய் என்று அவ்வளவு துணிச்சலோடு என்னிடம் கூற விரும்புகிறாயா? நீ இனிமேல் அத்தகைய குட்டைக் கால்சட்டைகளை அணியப் போவதில்லை என்று என்னிடம் சொல்கிறாயா லிடியா?' என்று கேட்டாள். இவ்வாறு கூறுவாயானால், பார், அதன் காரியம் என்னவென்று காண்பாயானால், நீ புதிய ஆவியை மட்டும் பெற்றிருந்தால், அது உன்னைக் கொல்லுகின்றது. அது சரியே.
 120. ஆனால் நீங்கள் அவருடைய ஆவியைப் பெற்றிருக்கும் போதோ, அது ஒவ்வொரு உணர்ச்சிகளையும் சரியாக தேவனுடைய வார்த்தைக்கு நகர்ந்து துடிக்கச்செய்கின்றது. அது சரியாக வார்த்தையுடன் துடித்து நகரும். நீ சொல்வாய் "இப்பொழுது, பார் சூசி, சற்றே ஒரு நிமிஷம். 'அப்படி செய்வது அவருக்கு முன்பாக அருவருப்பாக காணப்படுகிறது' என்று வேதாகமம் உரைத்துள்ளது. கிறிஸ்துவின் அன்பு என்னுள்ளத்தில் வந்திருப்பதால், அதைச் செய்வதைப்பார்க்கிலும், அவரை நான் அதிகமாக நேசிக்கிறேன். புரிகிறதா, நான் அவரை நேசிக்கின்றேன்" என்பாய்.
 121. "ஜான், அந்த மத வைராக்கியம் பிடித்த கூட்டத்தாருடன் இணைந்துவிட்டாய், என்று என்னிடம் கூற முயல்கிறாயா? மேலும் என் வீட்டிலே ஒரு புதிய ஆண்பிள்ளை பிறந்துள்ளதால் நீ ஒரு புகைச்சுருட்டை புகைக்க மாட்டேன் என்கிறாயா?"
 122. "ஆனால், ஜான் நீ பார்ப்பாயானால், அது கூறுகிறது நாம் கண்டிப்பாக... என் உள்ளத்திலுள்ள பரிசுத்த ஆவி, நாம் இந்த உலகத்தின் எல்லா அசுத்தங்களிலிருந்தும் விலகியிருக்க வேண்டும் என்று என்னிடம் கூறுகின்றது" புரிகிறதா? புரிகிறதா?
 123. "ஜான்! அல்லேலூயா! ஜான்! தேவனுக்கு மகிமை, ஜான்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! என் கைகளின் மேலுள்ள அந்த எண்ணெயைப் பார்! தேவனுக்கு மகிமை! ஜான். என்னால் அந்நிய பாஷைகளில் பேச முடியும். அல்லேலூயா! நான்..." என்றல்ல. இல்லையில்லை. பரிசுத்த ஆவியானவர் அப்படி நடந்து கொள்வதில்லை. இல்லையில்லை.
 அவள் நல்லொழுக்கத்துடன் நகர்ந்து செல்வாள்.
 124. பவுல் அகிரிப்பாவின் முன் நின்று வார்த்தையைக் கொண்டு வந்த போதும், அவன் "அகிரிப்பாவே..." என்றான்.
 125. அதற்கு அகிரிப்பா. 'பவுலே! நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்" என்றான்.
 126. அதற்கு அவன் அகிரிப்பாவே, நீர் ஒரு யூதனாயிருக்க, வேதம் முன்னரே யோகோவாவைக் குறித்து பேசி உரைத்திருப்பது உமக்கு விநோதமான ஒன்றா? தேவன் மரித்தோரை எழுப்புகிறது உமக்கு ஒரு விநோதமான காரியமா? என்று கேட்டான்.
 127. அகிரிப்பாவே! அல்லேலூயா! அகிரிப்பாவே தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! என்றல்ல. இல்லை அது பைத்தியக்காரத்தனமானது.
 ஆனால், "அகிரிப்பாவே, வேதவசனம் கூறுகின்றது." என்றான்.
 128. கடிகார பிரதான வில்கருள் எங்கே உங்களை நகர்த்துகின்றது என்று பாருங்கள்? சரியாகவே. நீங்கள் அதைக் குறித்து கவலை கொள்ளவே தேவையில்லை. அது யாவும் தேவனுடைய திட்டத்திலுள்ளது. அது உங்களை சரியாக திரும்ப நகர்த்துகின்றது. நீங்கள் என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள். "பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்களுக்குள் வாசமாயிருக்கிற பிதாவானவர், அவரே பேசுகிறவர்" என்றார்.
 129. "அகிரிப்பாவே, நீர் ஒரு யூதனாயிருந்து. பழைய ஏற்பாட்டின் எல்லா பிரமாணங்களையும் அறிந்தவரானதால், அகிரிப்பாவே. தேவன் மரித்தோரை எழுப்புகிறது உமக்கு ஆச்சரியமான காரியமோ?" என்றான்.
 அகிரிப்பா *சவுலே, அதிக கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது." என்றான்.
 130. அவன் அதற்கு, 'அகிரிப்பாவே. நான் பயித்தியக்காரனல்ல, தேவன் வார்த்தையில் என்ன செய்திருக்கிறார் என்பதை மட்டுமே இங்கே கூறிக்கொண்டிருக்கிறேன் என்றான். புரிகிறதா?
 'ஓ. பவுலே, நீ ஒரு உருளும் - பரிசுத்தனாகி விட்டாய்.
 131. அகிரிப்பாவே, இல்லை, அதாவது அவர் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை. கடைசி நாளில் எழுப்புவார் என்று தேவன் இந்த வேதவாக்கியத்தில் என்ன கூறி இருக்கிறாரோ, அதை மாத்திரமே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது, அகிரிப்பாவே, சிவந்த சமுத்திரத்தை பிளந்த அந்த யேகோவா தேவன் அந்நாளில் அற்புதங்களைச் செய்து கொண்டிருந்த அவர், இன்று அற்புதங்களைச் செய்வது உமக்கு ஒரு விநோதமான காரியமோ?" என்றான்.
 132. அவன் கூறினான், "பவுலே, நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்" என்றான்.
 133. பவுல் அதற்கு "என் காலிலும், கைகளிலும் இருக்கிற இச்சங்கலிகளின் கட்டைத்தவிர, நீர் என்னைப் போலாகும்படி விரும்புகிறேன்" என்றான்.
 134. அங்கேதான் நவமான இருதயத்தின் மத்தியிலிருக்கிற, புதிய ஆவியின் மையத்தில் உள்ள அந்த பிரதான வில் சுருளானது, ஒவ்வொரு உணர்ச்சிகளையும் சரியாக கட்டுப்படுத்தி இயக்குகின்றது. நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என்பதை புரிந்து கொள்கிறீர்களா? அதுதான் காரியம். அப்பொழுது மட்டுமே நீங்கள் உலகத்தின் நுகத்திலிருந்து உங்கள் தலையை உருவி எடுக்கின்றீர்கள்.
 135. "நான் சென்று சேர்ந்து கொள்வேன், ஆனால், நான் உங்களுக்கு ஒன்றை கூறட்டும்..." என்று கூறுவாயானால், உன்னுடைய நுகம் கிறிஸ்துவுடன் பூட்டப் பட்டுள்ளதா? அவருடன் நுகம் பூட்டப்பட்டுள்ளேன் என்று சொல்கிறாயா? அப்படி கூறிக்கொண்டு, பின்னர் நீ "ஓ, அது என் தோள்களைத் தேய்த்துசிராய்க்கிறது. என்னுடைய பொது வாழ்க்கை அந்தஸ்தை புண்படுத்துகின்றது. முன்பு என்னுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் என்னைக் கடந்து போகையில், 'ஆமாம் அவளேதான், அவள் ஒரு பரிசுத்த உருளை' என்கின்றனர். 'அதோ போகிறானே, அவனைப்பார், ஜான் இப்பொழுதெல்லாம் சூதாட்ட விடுதிக்கு வருவதில்லை." என்கின்றனர். ஓ, அது கொஞ்சம், ஓ. சகோதரன் பிரன்ஹாம், அது என்னை இழிவு படுத்துகின்றது என்பாயானால், இல்லை, நீ சரியான காரியத்தை பெற்றுக் கொள்ளவேயில்லை.
 136. அந்த கடிகாரத்தின் பிரதான வில்சுருள்ளானது மையத்தில் சரியாக பொருத்தப்பட்டிருக்கும்போது. நுகமானது சிறகுகளையுடையதைப் போன்று இலகுவாகிவிடுகின்றது. ஓ என்னே! உலகம் உன்னை என்னவாறு அழைத்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அது ஒன்றும் செய்வதில்லை.
 137. 'ஓ, நான் ஒன்றைக் கூறட்டுமா, அவர்கள் என்னை இதுவென்றும், அதுவென்றும், மற்றதென்றும் அழைப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாததால் தான் நான் பின்மாற்றமடைந்தேன்." என்பாயானால், பார். நீ ஒருபோதும் அந்த பிரதான வில்சுருளை...அவருடைய ஆவியை உன்னுடைய ஆவியின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கவே இல்லை. புரிகிறதா. நீ ஒரு கள்ள ஆள்மாறாட்டத்தையே கொண்டிருந்தாய். நீ - நீ அழுதாய். நீ ஒரு - ஒரு - ஒரு தவறுதலான புரிதலைக் கொண்டிருந்தாய். புரிகிறதா? நீங்கள் - நீங்கள் வெறுமனே நீங்கள் உணர்ச்சி வசப்படுதலின் பக்கத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டீர்களேயல்லாமல் அசலான பக்கத்தை ஒருபோதும் பெற்றிருக்கவேயில்லை. நீங்கள் வெறுமனே கடிகாரத்தின் முள் அசைகின்ற ஓசையைக் கேட்டு அந்த இரைச்சலைப் பெற்றுக்கொண்டு, அதனுடன் சென்று நீங்களும் ஓசையிடத் தொடங்கினீர்கள்.
 138. ஆனால் அந்த பிரதான வில்சுருளானது இயங்கிக் கொண்டிருக்குமானால், அது - அது ஒவ்வொரு உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்குமானால், அப்பொழுது நுகம் மெதுவாயிருக்கும். அவர்கள் "உங்களுக்கு தெரியுமா? அதோ செல்கிறாளே, அவள் ஒரு பாவையைப் போல இருந்தாள். ஆனால் இப்பொழுது அவளைப் பாருங்களேன், அவளுடைய தலைமுடி நீண்டு வளர்ந்து, அவருடைய முகஒப்பனை எல்லாமே போய்விட்டது. அவள் இப்படிப்பட்ட எளிய முறையில் காட்சியளிக்கும் வகையில் உடுத்துகிறாள்... என்று சொல்லக்கூடும். இப்பொழுது, ஏதோ "மிகப் பழங்கால பாணியிலான என்ற பொருளில் நான் கூறவில்லை, ஆனால் நான் கருதுவது - நான் கருதுவது இதுதான், அதாவது நீங்கள் நல்லொழுக்கமாக உடுத்தவேண்டும் என்பதையே. "ஏன், முன்பு அவள் தான் எழில் மிகுந்த சிறு பெண்ணாயிருந்தாள். அவள் தன் குட்டைக்கால் சட்டையுடன் முற்றத்தில் கிடந்து வெயில் காய்வதை நாங்கள் பார்ப்பதுண்டு, ஆனால் இனிமேல் அவள் அப்படிச் செய்வதில்லை." ஏனென்றால், ஏதோவொன்று சம்பவத்திருந்தது. பிரதான வில்சுருளானது எந்த ஸ்தானத்தில் பொருத்தப்பட வேண்டுமோ, அங்கே பொறுத்தப்பட்டிருக்கின்றது. அது சரியே. "ஓ, அவன் முன்பு வருவதுண்டு. அவன் ஒரு சூதாட்ட வித்தகனாயிருந்தான். அவனால் ஒரு கை முழுவதும் இவ்வாறு சீட்டுகளை விளையாட முடியும். அவனால் இங்கேயிருந்து சூது கட்டைகளை வாரி எடுக்கவும் இன்னும் அதைப் போன்றவற்றையும் செய்ய முடிந்திருந்தது. அவன் அவ்வாறு இருந்தான்... ஆனால் இப்பொழுது அவன் அதை செய்வதில்லை." பிரதான வில்சுருளேதான்! "ஓ, அவன் ஒரு பரிசுத்த - உருளை" என்பர்.
 139. ஆனால் நுகமானது மெதுவானதாயிருக்கிறது. நீங்கள் அதை என்ன செய்யப் போகிறீர்கள் தெரியுமா? நீங்கள் அதை சுமக்கவே விரும்புவீர்கள். அது சிம்சோன் காசாவின் வெண்கலக் கதவை தூக்கி எடுத்ததைப் போன்றே. அந்த பெரும் வெண்கலக் கதவை, அவன் வெறுமனே தன் தோளின் மேல் வைத்து சுமந்து கொண்டு சென்றான். அது சரியே. அந்த நுகம், சந்தோஷம், சமாதானம் என்னும் இயக்குக் கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும்போது. உங்கள் இருதயத்தில் கிறிஸ்துவின் இனிமை உண்டாயிருக்கும் போது, உலகம் உங்கள் மேல் இடுகின்ற எல்லா பாரங்களையும் நீங்கள் வெறுமனே தூக்கிக் கொண்டு, கல்வாரி என்னும் ஒரு குறிப்பிட்ட மலைக்குச் சுமந்து செல்வீர்கள். அங்கே முழங்காற்படியிட்டு உங்களை துன்பப்படுத்தினவர்களுக்காக ஜெபம் செய்வீர்கள். வானத்திலிருந்து அக்கினியை வருஷிக்கப் பண்ணி, சபையை கிழித்தெறிவதல்ல, ஆனால் நீங்கள் "தேவனே அவர்கள் மேல் இரக்கமாயிருப்பீராக" என்று அவர்களுக்கு சமாதானத்தை கொண்டு வருவீர்கள்.
 140. இப்பொழுது, வேதாகமம் கூறுகின்றது "அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும் போது, புதிய இடங்களில் அலைந்து, திரும்பி வருகின்றது. மேலும் முன்பொரு விசை உங்களை அத்தெருச்சந்திற்கு கொண்டு வந்த அந்த பிசாசு, அவன் திரும்பி வருகையில் தன்னுடைய தெருச்சந்து மாற்றப்பட்டிருப்பதைக் காண்கிறான்; என்னே, தேவன் தம்முடைய பெரிய நிலச்சமன் செய்யும் கருவியை அனுப்பினார். அவர் என்ன செய்தாரென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் நிலத்தை தோண்டியெடுத்திருந்தார். அவர் காரியங்களை தலைகீழாக மாற்றி விட்டிருந்தார். அதன் ஒரு புதிய அவர் காட்சியை உருவாக்கியிருந்தார். பிசாசு தன்னுடைய பழைய தகரக்குவளைகள் நிறைந்த தெருச்சந்துக்கு திரும்பி வருகையில், மதுபான பாட்டில்கள் எல்லாவிடங்களிலும் பரந்து கிடந்த, மேசையின் மீதெல்லாம் சீட்டுக்கட்டுகள் கிடந்திருந்த, வீடு முழுவதும் சிகரெட்டுகளால் நிறைந்து கிடந்த, காதல் கதை பத்திரிகைகளும், உண்மைதான், இருந்த அவ்விடத்திற்கு அவன் திரும்பி வருகின்றபோது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் காண்கிறான். அல்லேலூயா! தேவன் தம்முடைய நிலச்சமன் செய்யும் இயந்திரத்தை அனுப்பி, அதை முழுவதுமாக சுத்தம் செய்துவிட்டிருந்தார்.
 141. சகோதரனே, அவருடைய புல்டோசர் (நிலச்சமன் செய்யும் கருவி) இங்கேயுள்ளது. நீங்கள் இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். முழுவதுமாக தோண்டியெடுத்து, சமன்படுத்தி, முழுதும் பெருக்கி, அவர் தோட்டத்தை நாட்டத் தொடங்குகிறார். அவன் அங்கே. ஒரு மகத்தான. புது பாணியிலான நூதன வீடு கட்டப்பட்டிருக்கக் காண்கிறான். ஆமென்.
 142. பரிசுத்த ஆவியானவர் உட்புகுந்து விட்டார். மதுபான பாட்டில்களின் ஸ்தலத்தை பரிசுத்த ஆவி எடுத்துக்கொண்டது. நவநாகரிக கல்வியறிவின் ஸ்தானத்தை, வேதாகமம் எடுத்துக் கொண்டது. நவீன மத சாஸ்திரத்தின் ஸ்தலத்தை, தேவனுடைய ஆவி எடுத்துக் கொண்டது. பரிசுத்த ஆவி உள்ளே வந்தபோது. ஜெபக்கூட்டம் வீட்டுக்குத் திரும்பி வந்தது. மற்ற எல்லா காரியங்களும் புறம்பே சென்று விட்டது.
 143. அன்றியும், சிநேகிதனே. கவனிப்பாயாக. வேதம் கூறினது. ஆதியில்... பாருங்கள். இப்பொழுது நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்... நம்முடைய எல்லா அறிவுத்திறமையும், மனுஷன் உண்டாக்கிய கோட்பாடுகளும்... நான் முடிக்கப்போகும் தருவாயில், உங்களுக்கு ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறேன்.
 144. ஆதியிலே இந்த உலகமானது வெறுமையானதாய் இங்கே இடப்பட்டிருந்த போது, அது பனிக்கட்டிகுவியல்கள் உண்டாயிருந்த, ஒரு பெரிய ஜலத்தாலான பந்தாக மாத்திரமே இருந்தது. மேலும் பூஜ்ஜியத்தை விட பல லட்சம் டிகிரி குறைவான குளிர்வெப்பநிலையில் பூமியானது அப்படியாக சுண்டியிழுக்கப்பட்டு, ஆகாய மண்டலத்தினூடாக நகர்ந்து செல்கையில், சூரியனிலிருந்து உண்டான உஷ்ணத்தால், அது ஈரப்பதத்தை உருவாக்கியது.
 145. உஷ்ணமும் சீதளமும் ஒன்று சேர்வதால் ஈரப்பதம் உண்டாகின்றது. உங்களால் அதை இங்கே வீட்டிலிருந்தும், வெளியேயும், ஜன்னல்கள் போன்றவற்றிலும் காணமுடியும்.
 146. சூரியன்தான் பறந்து சென்ற இந்த ஏவுகணைகளின் மற்றும் எல்லாவற்றினுடையவும் தாய் என உரிமை கோரப்படுகிறது, பூமியானது. அது எங்கிருந்து வந்ததோ, அந்த கோளச்சுற்றுப் பாதையிலிருந்து சுழன்று சென்றபோது, அது அங்கிருந்து அகன்று சென்றபோது, ஒரு பெரிய திடப்பொருளாக உறைந்துவிட்டது. பின்னர் அது உள்ளே நகரத் தொடங்கிய போது, தேவன் ஒரு எண்ணங்கொண்டார்... இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவர் அதை சூரியனுக்கு அருகே நகர்த்த ஆரம்பித்தபோது, அது உருக துவங்கியது.
 147. அதன்பின்பு. தேவன் பரிசுத்த ஆவிக்கு கட்டளை கொடுத்தார்... முதலாவது அறிமுகம் செய்யப்பட்ட அந்த நபர் தேவனே. தேவன்! ஆதியாகமத்தில் உள்ளபடி "ஆதியிலே தேவன் உண்டாயிருந்தார்" அதன்பின் அறிமுகம் செய்யப்பட்டது பரிசுத்த ஆவி அல்லது லோகோஸ், அது தேவனிடமிருந்து புறப்பட்டுச்சென்றது. அப்படியிருந்தும் அது தேவன் முழுவதுமாக ஒரு நபருக்குள்ளாக செல்லுதல் ஆகும். மேலும் வேதம் கூறுகிறது "அது பூமியின் மேல் அசைவாடத் தொடங்கினது." அசைவாடுதல் என்றால் "அன்பு செய்தல்" ஒரு புறாவின் ஒலியெழுப்புதலை போன்று, அது பூமியை முழுவதும் அசைவாடி மூடிக்கொள்ள தொடங்கினது. என்ன சம்பவித்தது?
 148. அழிவுள்ளவர்கள், இக்காலையில் நான் இருப்பதைப் போன்றே. மனுஷர்களாகிய புருஷரும். ஸ்திரீகளும், உடன் பிரஜைகளும்; ஆத்துமாவையுடைய மனுஷர்களே, உங்களுக்குள் ஒரு அழியாமையுள்ள ஆத்துமா இருக்கின்றதே. யார் நீ? எங்கிருந்து வந்தாய்? நீ எங்கே போகப் போகிறாய்? அதைக்குறித்து சற்றே ஒரு நிமிஷம் சிந்தித்துப் பாருங்கள்.
 149. அன்றொரு இரவு, என்னுடைய... நீங்கள் அதை செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள், என்னுடைய நெருங்கிய உறவினச் சகோதரன், ரேய்மண்ட் பிரன்ஹாம் (Raymond Branham). லூயிவில்லில் ஒரு மருந்துவிற்பவர் அல்லது மருத்துவராக இருந்தான். அவன் தன் பணிக்குச் சென்று, வீடு திரும்பிய பின், உணவு உண்பதற்காக உட்கார்ந்து, தன் மனைவியிடம் ஒரு ஆரஞ்சு பழத்தை தருமாறு கேட்டவன், விறைப்படைந்து, மரித்துவிட்டான். அவனுடைய சகோதரன், ஜோர்ஜீ (Georgie). (இருவருமே எனது இரத்த சம்பந்தமான நெருங்கிய உறவுமுறை சகோதரர்கள்; என்னுடைய தந்தையின் சகோதரனுடைய பிள்ளைகள்). தன்னுடைய சகோதரனை பார்க்கச் சென்றான், தன் சகோதரனைப் பார்த்துவிட்டு திரும்பும் வழியில், ஐந்து நிமிடங்களில் ஒரு கார் அங்குமிங்கும் அசைந்து, வேகம் குறைவதை அவர்கள் கவனித்தனர், பின்பு அவர்கள் கார் இருக்கையிலிருந்து, தூக்கி வீசப்பட்ட மனிதனையே கண்டனர். அவனும் மாரடைப்பால் மரணமடைந்து விட்டான்.
 150. மற்றொரு இரவு நான் அந்த அடக்க ஆராதனை வீட்டிற்கு சென்றபோது, சகோதரன் டாக்கை (Doc) கண்டு உள்ளே சென்றோம். சுவர்களிலும், சுற்றிலும் தொங்க விடப்பட்டிருந்த மலர்களையும், நினைவு சின்னங்களையும் அறைகள் முழுவதுமாக சுற்றிலும் பார்த்தேன். மேலும் நான் கீழே நோக்கிப்பார்த்த போது, நான் வெறுமனே ஒரு சிறு குழந்தையாக இருக்கையில், சிறு பையனாக, இந்தப் பையன்களுடன் நான் விளையாடிக் கொண்டிருந்த ஞாபகங்கள் என் சிந்தைக்கு வந்தன.
 151. மேலும் நான் நினைத்தேன், அங்கே ஜனங்களும், வீடு முழுவதும் கூட்டமாகவும், உங்களால் காரை கூட நிறுத்த முடியாதவாறு, நீண்ட தூரம் கூட்டமாக நண்பர்களும், உறவினர்களும் அங்கே வந்து கொண்டிருந்தனர். நான் அங்கே உள்ளே சென்ற போது, என் உறவு சகோதரி ஆக்னெஸ் (Agnes) என் கழுத்தை சுற்றிப் பற்றியவாறு சத்தமிட்டு அழத்துவங்கினாள். நான் அவளுக்கு ஆறுதல் கூறி அவளிடமிருந்து செல்கையில், இதோ சிறு குழந்தை டோரத்தி (Dorothy) வந்தாள். அவள் என்னை அணைத்துக் கொண்டு பில்லி, நாங்கள் என்ன செய்யப் போகிறோமோ?" என்று கூறி கதறினாள்,
 நான், "லிஸ்ஸி அத்தை (Lizzie) எங்கே" என்று கேட்டேன்.
 152. அதற்கு அவள், "அவள் மாரடைப்புக்குள்ளாகி, மிகவும் மோசமான நிலையிலிருக்கிறாள். எந்த நேரமும் மரிக்கக்கூடும்" என்றாள். அது அவர்களின் தாய்.
 153. எனவே நான் "இந்த மகத்தான பிரன்ஹாம் சந்ததிக்கு என்ன சம்பவித்துக் கொண்டிருக்கின்றது?" என்று எண்ணினேன்.
 154. நான் என்னுடைய தகப்பனை பார்த்த போதும் அதே காரியத்தை தான் நினைத்தேன். அவரை என் கரங்களில் தாங்கி பிடித்திருந்த போது, அவருடைய சுருட்டை முடி என் கரங்களில் தட்டினது. நான் அவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, அவர் என்னை நோக்கிப்பார்த்து புன்னகைத்ததை கண்டேன், அவரும் தேவனை சந்திக்க சென்று விட்டார்.
 155. சில நாட்களுக்கு முன்பும் அதே காரியத்தை தான் நான் சிந்தித்துப் பார்த்தேன். என்னுடைய சகோதரன் டாக். அங்கே கொல்லப்பட்ட தன் சொந்த சகோதரனை தூக்கியெடுத்த போதும், ஒரு மனிதன், குடித்துவிட்டு கம்பத்தில் மோதி, கார் உடைந்ததால், தொண்டை யினூடாக அறுபட்டு இவன் கொல்லப்பட்டான், அவன் என் சகோதரனுடைய கரங்களிலேயே மரித்தான். அங்கிருந்த திரு.கெல்லியின் திருமதி.கெல்லியின்... வீட்டிலிருந்து, அப்பா தன்னுடைய கருப்பு நிற தொப்பியை தன் கையில் பிடித்தவாறு, அழுது கொண்டு, தெருவில் வந்ததை கண்டேன். சில நாட்கள் கழித்து, அவரை மரித்துக் கொண்டிருக்கிறவராக என் கரங்களில் ஏந்திக் கொண்டிருந்தேன்.
 156. என்னுடைய மைத்துனி ரூத் தேவனை சந்திக்க செல்லுகையில், அப்பழைய அசைந்தாடும் நாற்காலி, ஒருவருமே இல்லாமல், முன்னும் பின்னுமாக அசைந்தாடுவதை நான் அங்கே நின்று நோக்கிக் கொண்டிருந்தேன். நான் "தேனே, இயேசுவினுடைய படத்தை இங்கே தொங்க விடட்டுமா?" என்று கேட்டேன்.
 அதற்கு அவள். "வேண்டாம் பில்லி, அவர் எப்போதுமே எனக்கு முன்பாக இருக்கிறாரே" என்றாள்.
 157. அதன்பின்பு தான் என் பையன் பில்லி மற்றும் என் சிறு பெண் குழந்தை ஷாரோன் இவர்களின் தாயாகிய, என்னுடைய மனைவி ஹோப்பின் அருகே நின்ற போதும், அவளுடைய கருமை நிறக் கண்ணால் என்னை நோக்கிப் பார்த்தவாறு. என் கைகளைப் பற்றிக்கொண்டதை கண்டேன். மேலும் அவள் சற்றுமுன் சென்று வந்திருந்த அந்த ஸ்தலத்தைக் குறித்து பேசி, அங்கே திரும்பிச் செல்ல விரும்புவதாக என்னிடம் கூறி, "பில்லி இந்த சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஒருபோதும் தவறாதிரும். இவ்விதமாக கடந்து செல்வது எப்பேற்பட்ட சந்தோஷமாயுள்ளது என்பது உமக்குப் புரியவில்லை" என்றாள்.
 158. மேலும் அதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து, அதோ அங்கே மரித்துக் கொண்டிருந்த, என் சிறு குழந்தையின் தலையில், என் கைகளை வைத்தவாறு. அதனுடைய தாயின் கரங்களில் வைத்த போது, நான் சொன்னேன் "தேவனே, மரங்களில் உள்ள உயிர்ச்சத்தை நீர் குளிர் காலங்களில் நிலத்தினுள் மறைத்து வைத்து, வசந்த காலமாகிறபோது, பூப்பூத்து, கனியை கொண்டு வரத்தக்கதாக, அதை மேலெழும்பச் செய்கின்றீர் என்பதை நான் அறிவேன். நீர் தேவனாகவே இருந்தாக வேண்டும். இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் கலிலேயாவில் பிறந்த இந்த அற்புதச்சிறுவன், வேத வாக்கியங்களின் படியாகவே நடந்த அவர், எனக்கு, அவர் வாக்களிக்கப்பட்ட மேசியாவாகவே தான் உள்ளார் என்பதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அவர்கள் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, நான் அதை விசுவாசிக்கிறேன். வரப்போகிற காரியங்களை எனக்கு காண்பிக்கின்ற, ஏதோவொன்று எனக்குள் இருக்கிறதென்பதையும், இயற்கைக்கு மேம்பட்ட ஒருவர் தோன்றி, காரியங்கள் சம்பவிப்பதற்கு முன்னரே, நான் காண்கிறதையும் அறிந்திருக்கிறேன். அவைகளைக் குறித்து எனக்கு எச்சரிப்பும் கொடுப்பதுண்டு. ஆனால் இங்கே இக்காரியத்தில் நான் எந்த ஒரு எச்சரிப்பு இல்லாமல் இங்கேயிருக்கிறேனே. அவளின் தாய் அங்கே மரித்துக் கிடக்கிறாள். அங்கே தொலைவில் அப்பாவும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இப்பொழுது, என் சிறு குழந்தையையும் என் கைகளிலிருந்து எடுத்துக் கொள்ளப் போகிறீரோ. தேவனே? நீர் அதைச் செய்யப்போகிறீரா, என் அன்பிற்கினியவளை எடுத்துக்கொள்ளப் போகிறீரா?" என்றேன். அப்பொழுது ஒரு கறுப்புத் திரை எனக்கு முன்பாக அவிழ்ந்து விழுந்தது. அவர் அவர் செய்து முடித்துவிட்டார் என்று அறிந்துகொண்டேன். பிரதான வில்சுருள் மாத்திரம் அப்பொழுது இல்லாதிருந்தால்!
 159. சாத்தான் என்னிடம் சொன்னான் "இப்பொழுது அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? உன்னுடைய அன்பிற்கினிய சிறு குழந்தையையும் கூட அவர், உன் கரங்களிலிருந்து எடுக்கப் போகின்றாரே. எவ்வளவு கொடூரமாக உள்ளது" என்றான். அதுதான் புதிய ஆவியாகும். அதுதான்... புத்தி சாதுரியமிக்கவர்கள் எல்லாரும்.
 160. என் எலும்புகள் ஒன்றுக்கொன்று இடித்துக்கொண்டிருக்க, அங்கே நின்றவனாக "நான் எங்கே போவேன்" என்று நினைத்தேன்.
 161. "நான் வெளியே சென்று குடிக்கதொடங்குவேன். நீ உன் வாழ்க்கையில் ஒருபோதும் குடித்ததே கிடையாது, ஆனால் நான் எப்படியாயினும் அதைச் செய்வேன். அவர் அதை செய்யக்கூடாதென்று உன்னிடம் கூறியிருக்கிறார், ஆனால் எப்படியிருந்தாலும் நான் அதைச்செய்யப் போகிறேன். யார் எஜமான் என்று அவருக்கு காண்பிப்பேன்."
 162. நான் சொன்னேன், "சாத்தானே, என்னால் முடியாது. அவர்தான் எஜமான்" என்றேன். அது எல்லாம் அந்த பிரதான வில்சுருளைப் பொறுத்துதான் உள்ளது. ஒரு பிரதான வில்சுருள் அங்குள்ளதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுடையவனாயிருக்கிறேன்.
 163. நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திரு.ஐஸ்லர் அவர்கள்... என்னுடைய குடும்பமே கடந்து சென்றுவிட்டிருந்தது. நான் அங்கே நடந்து செல்லவிருந்தேன்... என்னால் கல்லறையண்டை செல்ல இயலவில்லை. நான் சாலையின் பக்கமாக மட்டும் நடந்து சென்றேன். அதற்கு சமீப காலம் முன்புதான் வெள்ளப்பெருக்கு நீர்மட்டம் குறைந்திருந்தது.
 164. திரு.ஐஸ்லர் (Isler) சாலைக்கு வந்தார். காரிலிருந்து இறங்கி வந்து, அவர் கேட்டார் "பில்லி உம்மிடம், ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் நீர் அந்த கூடாரத்தில் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன். நீர் பிரசங்கித்ததை கேட்டேன். நீர் அளித்து கொண்டிருந்த அந்த செய்தியின் மீது எவ்வளவு வெகு ஆர்வமிக்கவராய் இருந்தீர், அதை ஜனங்களிடம் கொண்டுவந்தீர். இப்பொழுது, அது உமக்கு என்னவாயிருக்கிறது இப்பொழுது? நீர் இப்பொழுதும் அவரை நேசிக்கிறீரா? நீர் இன்னமும் அவரைச் சேவிப்பேன் என்று கூறுகிறீரா?" என்றார்.
 165. நான் சொன்னேன், "திரு.ஐஸ்லர் அவர்களே, அவர் என்னை பாதாளத்துக்கு அனுப்பினாலும், இன்னமும் அவரை நேசிப்பேன். ஏனென்றால் இங்கே ஏதோவொன்று வைக்கப்பட்டிருக்கின்றது, பாரும், இனி நான் அல்ல, ஆனால் அவரேயாகும் என்பதாயுள்ளது." என்றேன்.
 166. என் குடும்பத்தையும், என் தகப்பனையும், என் சகோதரனையும், என் மனைவியும், என் குழந்தையையும் இழந்திருந்தாலும், இங்கிருந்து வால்நட் ரிட்ஜ் (Wainut Ridge) வரையிலும் வெவ்வேறு கல்லறைகளில் அடக்கம் செய்திருந்தாலும், நான் இதில் திருப்தியுள்ளவ னாயிருக்கின்றேன். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அதே பூமியின் தூளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த உலகமானது உண்டாக்கப்பட்டபோது, அவர்கள் இங்கே இருந்திருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டுள்ளேன். ஏனெனில் அவர்கள் இப்பூமியிலிருந்து தான் எடுக்கப்பட்டனர். இந்த பூமியானது உண்டாக்கப்பட்டபோது அவர்கள் இங்கேயிருந்தனர்.
 167. பூமியானது உண்டாக்கப்படுவதற்கு முன்னமே நம்முடைய சரீரங்கள் இங்கிருந்தன. ஏனென்றால் நாம் பூமியிலிருந்து எடுக்கப்பட்டோம். நாம் சுண்ணாம்பு, சாம்பல் உப்பு, தாது எண்ணெய், காஸ்மிக் ஒளி, அணுக்கள் ஆகியவற்றைக் கொண்டுதான் உண்டாக்கப்பட்டுள்ளோம். அவை தான் நம்மை ஒருங்கே சேர்த்து பிடித்துள்ளன. மேலும் எப்படியோ ஒரு வகையில், ஏதோ ஒரு தலைசிறந்த சிந்தையைக் கொண்டு நாம் இருக்கிறபடி இவ்விதமாய் உருவாக்கப்பட்டோம். வெறுமனே சாம்பல் உப்பு, சுண்ணாம்பு மற்றும் தாது எண்ணெய் இவற்றை ஒன்று திரட்டி குவிப்பது அல்ல, ஆனால் ஏதோவொன்று அதற்குள்ளாகச் சென்று சிருஷ்டிக்க தொடங்கினது. ஆதலால் தான் நான் இவ்விதமாய் உண்டாக்கப்பட்டிருக்கின்றேன்.
 168. ஆதியிலேயே, பரிசுத்த ஆவியானவர் ஒரு பாழ்நிலமான பாலைவனத்தை மூடி அசைவாட்டுவதைப் போன்று; என்னுடைய உணர்ச்சிவசப்படுதலை பொறுத்துக் கொள்ளுங்கள்; ஆனால் அங்கே ஒன்றுமேயில்லை, அதற்கு முன்பு ஒன்றுமே உண்டாயிருந்ததேயில்லை. ஆனால் பரிசுத்த ஆவி தேவனிடமிருந்து அனுப்பப்பட்டது; அறிவுத்திறமை வாய்ந்த ஒன்றையல்ல. ஆனால் பூமியின் மீது அன்பு செலுத்தும் படி தேவனுடைய சமுகத்திலிருந்து பரிசுத்த ஆவி அனுப்பப்பட்டது.
 169. மேலும் அவ்வாறு அவர் தம்முடைய மகத்தான சிறகுகளை பூமியின் மீது விரித்து, பூமியின் மீது அன்பு செலுத்த அல்லது அசைவாட, இனிமையாய் நயந்து ஒலிக்கத் தொடங்கினார். கண்ணாம்பும், சாம்பல் உப்பும் ஒன்றுதிரண்டு வருகையில், ஒரு சிறு ஈஸ்டர் லீலி முளைத்தெழும்புவதை என்னால் காண முடிகின்றது. பரிசுத்த ஆவியானவர் அசைவாடி, அதை பூமியிலிருந்து தோன்றச் செய்தார். அவர் தொடர்ந்து அசைவாடிக் கொண்டிருந்தார், அவர் இனிதாய் நயந்து அசைவாடின போது, மரங்கள் வளர்ந்து வருவதையும், பறவைகள் பூமியிலிருந்து பறக்க ஆரம்பிப்பதையும், மிருகங்கள் நடக்கத் தொடங்குவதையும் நான் காணத் துவங்குகிறேன்.
 170. அவர் தொடர்ந்து இனிதாய் மெல்ல ஓசையெழுப்பிக் கொண்டிருந்தபோது, ஆதாம் என்று அழைக்கப்பட்ட ஒரு மனுஷன் மேலே வந்தான். ஆதாம் தனிமையாயிருந்ததாக தோற்றமளித்ததால், அவர் அவனுக்காக ஒரு உப-சிருஷ்டியை உண்டாக்கினார். அவனுடைய பக்கவாட்டிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, இருதயத்துக்கினிய ஒருத்தியை, ஏவாளை அவனுக்காக உண்டாக்கினார். அவர் ஆதாமை நேசித்தார், அவர் ஏவாளையும் நேசித்தார். அவர் அவர்களை எடுத்து...
 171. சிறு ஏவாளை, அவள் தன்னுடைய சிறிய தலையை ஆதாமுடைய தோளில் சாய்த்திருப்பதை என்னால் பார்க்க முடிகின்றது. ஒரு ஸ்திரீ எவ்வளவு எதிர்பார்க்கக்கூடுமோ, அதற்கும் மேலாக எல்லாவற்றையும் உடையவளாக இருந்தாள். அவள் தன்னுடைய இருதயத்துக் கினியவனான ஆதாமுடைய பெரிய, பலமான தோளின் மீது சாய்ந்தவாறு, அவர்கள் தோட்டத்தினூடாக நடந்துசெல்கையில், ஒருக்கால் அந்த - அந்த சிங்கம் கர்ஜித்திருக்கலாம். அவளால் பயப்பட முடியாது, ஏனென்றால் அங்கே பயம் என்பதே இல்லாதிருந்தது. ஆகவே அவன் "இருதயத்துக்கினியவளே, அதுதான் சிங்கம். நான் அதை அழைக்கிறேன், சிங்கமே, லியோ முன்னே வா. புலியே, சிறுத்தை நீ இங்கே வந்து படுத்துக்கொள்" என்றான். அவைகள் சிறு பூனை குட்டிகளைப் போல அவர்களின் பின்னால் சென்றன.
 172. காற்று வீசத் துவங்கியபோது, சிறு ஏவாளின் தலைமுடி பறக்க தொடங்கியது. அவள் அதற்கு "ஓ, அந்த காற்று" என்றாள்.
 173. "இரையாதே. அமைதலாயிரு" என்றான், காற்றுகள் அவனுக்கு கீழ்ப்படிந்தன. அவன் தேவனுடைய குமாரனாயிருந்தான். அவள் அவனுடைய இருதயத்துக்கு இனியவளாக இருந்தாள்.
 174. அதன் பின்பு அவன், "பிரியமானவளே, சூரியன் அஸ்தமிக்கிறதை பார்த்தாயா? நாம் பிதாவுடன் பேசுவதற்கு சமயமாகிவிட்டது" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
 175. ஆகவே, அவர்கள் தேவாலயமாகிய, அந்த மகத்தான விருட்சத்தண்டை சென்றனர். அவர்கள் முழங்காற்படியிட்டிருந்த போது, சடுதியாக ஒரு பரலோகத் தன்மையுடைய, பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒளியாகிய லோகோஸ் கீழிறங்கி வந்தார். அவர்களை பூமியின் மீது அசைவாடி தோன்றச் செய்திருந்த அதே பரிசுத்த ஆவியானவர், இறங்கி வந்தார்; பிதாவாகிய தேவன், அவர் "பிள்ளைகளே. இன்று மகிழ்ச்சியாயிருந்தீர்களா? " என்று கேட்டார்.
 "ஆம், தகப்பனே '
 176. நான் உங்களை 'நல் இரவு' முத்தமிட்டு, இன்றிரவு நீங்கள் இளைப்பாறும்படிகிடத்துவதற்காக இறங்கி வந்தேன் என்று கூறி அவர்களை கன்னத்தில் முத்தம் செய்து கிடத்தினார். எதுவுமே அவர்களை சேதப்படுத்த முடியாதிருந்தது. அவர் அவர்களுடன் அந்த புதர்களுக்குள்ளேயே இருந்தார். சிங்கத்தை, அவர் அந்த சிங்கத்தை படுக்க வைத்தார். அவர் அந்த சிறுத்தை, அந்த புலியை படுக்க வைத்தார். அவை யாவற்றையும் இளைப்பாறும்படியாக படுக்க வைத்தார். பிதாவுக்கு மிகவும் பிரியமாயிருந்தது.
 177. அதன்பின்பு பாவமானது, அறிவின் மூலம், புத்தி கூர்மையினால் வந்தது... நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன். புத்திகூர்மையினால் பாவமானது உலகத்துக்குள் நுழைந்தது, அதிக வெளிச்சத்தை கண்டுபிடிக்க முயற்சித்ததினால், தேவனுடைய வார்த்தையில் இல்லாத ஏதோவொன்றை பெற்றுக்கொண்டதனால், பாவமானது இவ்வுலகத்துக்குள் நுழைந்தது. தேவன் "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே, சாவீர்கள்" என்று உரைத்திருந்தார். ஆனால் ஏவாளோ ஏதோ புதிய ஒன்றை விரும்பினாள்.
 178. ஓ, நான் என்னுடைய இருதயத்திலிருந்து ஒருவரையும் வஞ்சிக்கும் படி முயற்சிக்கவில்லை என்பதை உங்களால் காண முடிகின்றதா? கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை மாத்திரமே காட்சியில் வைக்க பிரயாசித்துக் கொண்டிருக்கிறேன், வார்த்தை, அதை மட்டுமேயன்றி வேறொன்றையுமல்ல; மூட மத வைராக்கியத்திற்கும், பெரிய சபைகளுக்கும். புத்திகூர்மைக்கும் அல்ல, ஆனால் பூமியிலிருந்து அசைவாட்டி நம்மை தோன்றச்செய்த அந்த ஒருவருக்குச் செவி கொடுங்கள்.
 பாவமானது நுழைந்தது.
 179. மேலும் இப்பொழுது, நண்பர்களே தேவன் நம்மை இப்பூமியிலிருந்து அசைவாட்டி தோன்றச் செய்வதற்கு, பரிசுத்த ஆவி என்ற ஒரே ஒரு உபகரணத்தை மாத்திரமே உபயோகித் திருந்தாரானால், நாம் இந்த பூமியிலிருந்து தான் வந்தோம். மேலும் பூமியானது உண்டாவதற்கு முன்பே நாம் இங்கேயிருந்தோம். ஜெபம் செய்யப்படும்படி வந்திருக்கின்ற ஜனங்களாகிய உங்களுக்கு இங்கே ஒரு ஊமக்கமளிக்கும் காரியம் உள்ளது என்பதை நினைவிருக்கட்டும் பரிசுத்த ஆவியானவர் அசைவாடுதலின் மூலம் இந்த மாம்சப்பிரகாரமான சரீரத்தை உண்டாக்கினாரென்றால், நம்முடைய சரீரங்களின் கூட்டி சிற்பி யார்?
 தேவனே ஜனங்கள் அதைப் புரிந்து கொள்வார்களாக
 180. பரிசுத்த ஆவியானவர் தான் உனக்கு உன்னுடைய குடல்வாலையும் உள் கண்களையும், உன் மூக்கையும் உள் வாயையும், உன்னுடைய இருதயத்தையும் அளித்தவர் மேலும் உனக்கு ஒரு புதிய ஆவியையும் தந்து, பின்பு உனக்குள் வாசம்பண்னும் படி வருகின்றார். வேதத்திற்கு முரணாயுள்ள எந்த மத சாஸ்திரங்களையோ, அறிவுத்திறன் வாய்ந்த காரியங்களையோ எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் மட்டுமே தரித்திருங்கள்: "அவர் தம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்."
 181. பரிசுத்த ஆவியாளவர். இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம்பண்ணும்படியாக தன்னுடைய சொந்த சரீரத்தின் மீதே அசைவாடினார். அவர் மரியாளின் மேல் நிழவிட்டுஅந்த கர்ப்பத்தில் ஒரு இரத்த அணுவை சிஷ்டித்தபோது அல்லது அசைவாடி தோற்றுவித்த போது அது கிறிஸ்து இயேசுவாகிய குமாரனை கொண்டு வந்தது. முப்பத்து மூன்றரை வருஷங்களாக தேவன் தாமே இப்பூமியின் மீது கூடாரமிட்டு வாசமாயிருந்தார். நம்மை மீட்டுக் கொள்வதற்கும், இழக்கப்பட்டுப் போன மனுஷனுக்கும் பரிசுத்தமான தேவனுக்கும் இடையே ஒப்புரவாக்குதலைக் கொண்டுவரவும், சூரியன் தம்முடைய மலை உச்சியில் அஸ்தமிக்கின்ற அந்த சாயங்காலத்தின் குளிர்ச்சியான லேளையிலே அவர்களை ஒருமித்து ஒப்புரவாக்கி முத்தமிடுவதற்கும், தம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கின்ற கிருபாதார பலியானார். என்னுடைய ஜீவிய பிரயாணத்தை ஓடி முடித்தபின் என் ஓட்டத்தை ஓடி முடிக்கையில் ஸ்தேவான் முழுவதுமாய் நிகைத்துநின்ற போது, அவர் செய்ததைப் போன்றே என்னை முத்தமிட்டு உறங்கச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அவன் "வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்" என்றான். அதுதான் காரியம்,
 182. இப்பொழுது அது எப்படி சம்பவிக்கக்கூடும்? என்ன நடந்து கொண்டிருந்தது என்று நாம் அறியாதிருந்த போதே, தேவன் தம்மை நாமாக உண்டாக்கியிருப்பாரானால், தேவன் என்னை ஒரு புருஷனாக சிருஷ்டித்து, மரணம் பிரவேசிக்கும் முன்னே என்னை எனது சரியான வயதில் வைத்திருந்தாரானால்... சுமார் இருபத்து மூன்று வயதில், நான் ஆரோக்கியத்துடனும், திடமாகவும் இருந்தேன். மேலும் சாத்தான் இடையூறு செய்யாதிருந்தால், அவன் முடமாக்கவும், என்னை சுட்டுத்தள்ளவும் இன்னும் பல காரியங்களையும் செய்ய முயற்சித்தான்.. ஆனால் தேவன் கண்ணோக்கமாயிருந்ததால்...
 183. வயது முதிர்ந்த ஸ்திரீகளாகிய நீங்கள் - நீங்கள் இளமையாகவும் அழகாகவும் இருந்தபோதும், முன்பு இளமையுடனும், ஆரோக்கியத்துடனும், திடமாகவும் இருந்த புருஷர்களாகிய நீங்களும், ஒரு புருஷனாக இருப்பதைக் குறித்து உங்களுடைய சிறு வாழ்க்கைத் துணையுடன் எவ்வாறு களிகூர்ந்திருப்பீர்கள்: உங்களுக்கு அதில் கருத்து கூற எந்த உரிமையும் இல்லாதிருந்தபோதே தேவன் அதைச் செய்திருப்பாரானால்; நீங்கள் "என்னை இவ்வாறு உண்டாக்கும்" என்று ஒருபோதும் கூறவேயில்லை. "கவலைப்படுகிறதாலே எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? "
 184. ஆனால் நீங்கள் எதுவுமே கூறாமலேயே உங்களை அவர் இவ்வாறு உண்டாக்கியிருப்பார் என்றால், தம்முடைய அசைவாடுதலின் மூலமாக உங்களுக்கு - உங்களுக்கு, நீங்களாகவே தெரிந்து கொள்ளும் ஒரு முறையைக் கொடுக்கும்போது, அவரால் இன்னும் எவ்வளவு மிகுதியானவற்றை செய்ய இயலும். நீங்கள் சுய விருப்பத்தின் படி தெரிந்து கொள்ளும் சுயாதீனத்தை பெற்றுள்ளீர்கள். உங்களால் இதை புறக்கணிக்க முடியும், அல்லது நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை புறக்கணிப்பது என்பது இழக்கப்பட்டவர்களாய், சாம்பல் உப்பாகவும், சுண்ணாம்பாகவும். தாது எண்ணெயாகவும் மாத்திரமே இருக்கச் செய்யும். இதை ஏற்றுக் கொள்வதோ, ஒரு நவமான இருதயத்தையும், ஒரு புதிய ஆவியையும், லோகோஸின் ஒரு பாகமாகிய அவருடைய ஆவியையும் உங்களுக்கு ஈந்து, உங்களுடைய உணர்ச்சிகளை இயக்கும்படியாக இவற்றைப் பெற்றுக் கொள்ளச் செய்கின்றது. மேலும் அவர் தம்முடைய வார்த்தையின் மூலமாக இனிதாய் கூவியழைக்கும்போது, நீங்கள் அவருக்கு மறுஉத்தரவு கொடுக்கும்படி திரும்ப கூவுவீர்கள்.
 "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
 'ஆமென், கர்த்தாவே"
 "உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே. "
 "ஆமென், கர்த்தாவே" என்று.
 185. காற்றினால் உங்களுடைய சரீரம் கிழக்கு முதல் மேற்கு வரைக்கும் தூக்கிவீசப்பட்டாலும் கூட, அவர் எவ்வளவு அதிகமாய் உங்களை உயிரோடெழுப்புவார்! இந்நாட்களில் ஒன்றில் இந்த பூமியின் மீது வீசப்படப்போகின்ற இந்த அணுகுண்டு, துளைகளை துளைத்து, அதை ஆகாய வெளியினூடாக சிதறடித்து, முற்றிலுமான பேரழிவு ஏற்பட்ட பின்பும். இந்த பரிசுத்த ஆவியானவரால் எவ்வளவு அதிகமானவற்றை செய்ய முடியும். ஆனால் சுண்ணாம்பும், சாம்பல் உப்பும் இங்குதான் மீந்திருக்கும். அதன் பின்பு, பரிசுத்த ஆவியானவர் மீண்டும் அசைவாடத் தொடங்குவார். ஒவ்வொரு எலும்பும் எலும்பினிடத்துக்கும், ஒவ்வொரு அங்கமும், அங்கத்தினிடத்துக்கும் செல்லும். மேலும் ஜீவனுள்ள தேவனுடைய ஒரு சபை கடைசி நாட்களில் எழும்பிநிற்கும்.
 186. நண்பர்களே பரிசுத்த ஆவியானவரின் அசைவாட்டுதலினாலும் அல்லது கூவுதலினாலும் மாத்திரமே உங்களால் அதைச் செய்ய முடியும். தேவன் உன்னை உயிரோடு எழுப்புவதாக எப்பொழுதாவது வாக்களித்திருப்பாரானால், நீ அவருடைய சத்தத்திற்கு, உன் ஆத்துமாவின் ஆழங்களில் பேசுகின்ற அந்த அமர்ந்த, மெல்லிய சத்தத்திற்குச் செவி கொடுக்கும் போது மட்டுமே ஆகும்.
 187. மேலும் நண்பர்களே, இன்னும் சற்றே ஒரு நிமிஷத்தில் இதை முடிக்கும் தருவாயில், நீங்கள் ஆழமாகவும் உத்தமத்துடனும் சிந்திக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஒருநாள் நாம் பிரிந்து செல்லத்தான் போகிறோம். பின்னை ஏன், ஓ, பெந்தெகொஸ்தேவின் ஆகாய மண்டலங்கள் முழுவதும் அசலான ஆசீர்வாதங்களால் நிறைந்திருக்க, நீ போலியான எதையோ, எந்த ஒரு சபையின் சாஸ்திரத்தையோ, எந்த ஒரு புத்தி கூர்மையான காரியத்தையோ, எந்த ஒரு உணர்ச்சிவசப்படுதலையோ, முரண்பாடான ஏதோவொன்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென முயல்வது ஏன் என்று தயவு கூர்ந்து எனக்குச் சொல்லுங்கள். உண்மையான தேவனுடைய ஆவிதான் உன்னை கட்டுப்படுத்தி, உன்னை ஒரு அசலான கிறிஸ்தவனாக ஆக்குகிறது. நீ ஒன்றையுமே ஆள்மாறாட்டம் செய்யத் தேவையில்லை. நீ வெறுமனே ஜீவிக்கின்ற தேவனுடைய பிள்ளையாக மாத்திரம் இரு. ஏன்? தேவன் சித்தமுள்ளவராய் காத்துக்கொண்டிருக்கும் போது, நீ ஏன் வேறு வித்தியாசமான எந்தவொன்றையும் ஏற்றுக்கொள்ள இப்பொழுது ஏன் முயற்சிக்கின்றாய் என்று எனக்குச் சொல்? மேலும் உன்னை இம்மட்டும் கொண்டுவந்து, பின்னர் பரிசுத்த ஆவியின் மூலமாக உனக்கு அன்பை செலுத்த பிரயாசித்துக் கொண்டிருக்கையில், நீ - நீ உன்னைப் பரலோகத்துக்கு கொண்டு செல்லும்படி மதக் கோட்பாடுகளின் அறிக்கை, அல்லது வேதத்திலேயே அடையாளம் காணப்பட்டிராத ஏதோ மூட மத வைராக்கிய, மனோ உணர்ச்சிகள் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளப் போகிறாயா?
 188. அதை நீ பெற்றுக்கொள்ள மாட்டாயா? ஓ, தேவ ஜனமே, உன் தேவனை நோக்கி முழங்காற் படியிடு! இப்பொழுது நாம் ஜெபம் செய்கையில், தேவன் இரக்கமாயிருப்பாராக என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது.
 189. நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கையில், பயபக்தியான இந்த வேளையில், ஒருக்கால், சரியாக இந்த நிமிஷத்திலேயே உங்கள் மீது இளைப்பாறுதல் உண்டாவதாக. இச்சபையின் மேலும், இங்கிருக்கின்ற அநேகர் மேலும் ஆழமாக சிந்தியுங்கள். அது ஒரு மேலோட்டமான சிந்தனையாக இருக்க வேண்டாம். நீங்கள் பரிசுத்த ஆவியானவரிடம் அன்பு செலுத்துகிறீர்களா? உன் ஜீவியத்தில் உள்ள அந்த - அந்த ஆவி, உன்னுடைய உணர்ச்சிகளை சரியாக வேதத்துடன் ஒத்திசைந்து இயக்குகிறதா? நீடிய பொறுமை. தயவு, நற்குணம் இவைகளைக் கொண்டிருக்கிறாயா? மூலப்பொருளானது பரிசோதிக்கப்படுவதில்லை இல்லை...
 நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கும் போது, இதை கவனியுங்கள்.
 190. மூலப்பொருள். ஆக்கப்பொருட் கூறு அதனுடைய அளவைக் கொண்டு, அது எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதைக் கொண்டு பரிசோதிக்கப்படுவதில்லை; ஒரு சபை எவ்வளவு பெரிது என்பதல்ல என்னும் அர்த்தத்தில் இங்கே கூறுகிறேன். பாருங்கள். அது தன்னுடைய அளவைக் கொண்டு அல்ல. ஆனால் அதனுடைய தரத்தைக் கொண்டு தான் பரிசோதிக்கப்படுகின்றது. உலோகம் அதனுடைய வலிமை ஆற்றலைக் கொண்டு பரிசோதிக்கப்படுகின்றது. சபையும், அது எவ்வளவு பெரிய சபை என்றோ அல்லது எத்தனை அங்கத்தினர்கள் உள்ளனர் என்பதைக்கொண்டோ பரிசோதிக்கப்படுவதில்லை. அது வேதாகமம் என்ற அதனுடைய வலிமை ஆற்றலைக் கொண்டே பரிசோதிக்கப்படுகின்றது. தேவன் அளித்த ஒவ்வொரு வாக்குத்தத் தத்திற்கும் அது எப்படி "ஆமென்" என்று கூற முடிகிறது? உங்களுடைய ஜீவியம் இரக்கம், சாந்தம், தயவு, பொறுமை இவற்றுடன் அசைந்து நகர்கிறதா? ஏதாவது ஒன்று உன்னைத் தூண்டும் போது அது என்னவாயுள்ளது? உடனடியாகவே அங்கேயுள்ள ஒரு சிறு சக்கரம் இயங்கத் தொடங்கி, உன்னை கட்டுப்படுத்தி வைக்கின்றது. அவருடைய அன்பு உன் இருதயத்தினூடாக அசைகின்றது. அதை நீ வெறுமனே அணிந்துகொள்ள மாத்திரம் பிரயாசிக்கின்றாயா?
 191. ஓ, இப்பொழுது சிந்தித்துப் பார். நீ கருத்தாய் சிந்தித்துக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் இடைபட்டுக் கொண்டிருக்கின்றார். உன் மீது அசைவாடி "என் பிள்ளையே, நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்கிறார்.
 192. இப்பொழுது, கிறிஸ்துவின் நாமத்தில் நம்முடைய தலைகளை தேவனுக்கு முன்பாக தாழ்த்தியிருக்கையில், எனக்கு முன்பாக அல்ல, உங்களுடைய கைகளை உயர்த்துவீர்களா? "தேவனே, உம்முடைய ஆவியை எனக்குள் வையும். இதோ என்னுடைய கரம்" என்று கூறுங்கள். உங்களை ஆசீர்வதிப்பாராக. அநேக, அநேக கரங்கள் தேவன் உயர்த்தப்பட்டுள்ளன.
 193. தேவனாகிய பிதாவே, கைகளை உயர்த்திய ஒவ்வொரு நபருடைய இருதயத்திலும் இன்று நீர் உம்முடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளுமாறு, என்றென்றும் அசைவாடிக்கொண்டும், கனிவுடன் நயந்து கூவியழைத்துக் கொண்டுமிருக்கின்ற பரிசுத்த ஆவியாகிய, உம்முடைய குமாரன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். தங்களுக்கு நீர் வேண்டும் என்பதை உம்மிடம் அவர்களே அறிவித்திருக்கின்றனர். ஓ, நீர் எவ்வளவாய் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறீர். அன்றியும், இப்பொழுது அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்வார்களானால், இருதயம் துடிக்க மறுக்கின்ற அந்த நாழிகையைக் குறித்து என்ன? மரணத்தின் குளிர்வெண் புகையானது மிதந்து வரத்துவங்குவதை, அவர்கள் உணருகின்ற அந்த மணிவேளை எப்படி இருக்கும்? அப்பொழுது அவர்கள் அதை, எவ்வளவு அதிகமாக அடையாளம் கண்டுகொள்ளப் போகின்றனர்! மேலும் நாம் என்னவாயிருக்கிறோம்? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே செல்ல போகிறோம்?
 194. அல்லாமலும் பிதாவே, கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆள் மாறாட்டங்களால் நாங்கள் களைத்துப் போயுள்ளோம். கர்த்தாவே ஒரு நவமான இருதயத்தையும், ஒரு புதிய ஆவியையும் இன்று எங்களிலே சிருஷ்டியும். பின்பு உம்முடைய தீர்க்கதரிசியின் வார்த்தையின் படியே, உம்முடைய ஆவியை, எங்களுடைய புதிய ஆவியின் மத்தியில் வையும். அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், தயவு, பொறுமை மற்றும் விசுவாசம் இவைகளால் எங்களை கட்டுப்படுத்தி இயக்கும். எங்களை தாமே, எங்கள் ஆத்துமாக்களையும், உள்ளிந்திரியங்களையும் நாங்கள் தாழ்மையாய் ஒப்புக் கொடுக்கையில், ஆவியின் சகல கனிகளும் எங்களிலே காணப்படுவதாக. இந்த பூமிக்குரிய சுண்ணாம்பு, சாம்பல் உப்பு, தாது எண்ணெய் இவைகளை அளித்து, இவ்வாறு ஒருமித்து பிடித்திருக்கின்ற, அந்த ஜீவன், எங்களை விட்டுப்பிரிகையில், நாங்கள் அந்த மண்ணுக்கே திரும்பிச் செல்கிறோம். மேலும் நாங்கள் எங்களுடைய ஆவியை ஒப்புக்கொடுக்கிறோம்: அவைகளை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நிலைவரமான ஆவியை எங்களில் சிருஷ்டியும், அன்றியும், நாங்கள் தொடர்ந்து பிரயாணிக்கையில், உம்முடைய ஆவியான, பரிசுத்த ஆவியானவர் எங்களை கட்டுப்படுத்தி, நடத்தி, வழிகாட்டுவாராக,
 195. அருமையான இந்த ஜனங்களை ஆசீர்வதியும். அல்லாமலும் கர்த்தாவே எங்கள் மத்தியிலுள்ள சுகவீனங்களை சொஸ்தமாக்குவீராக. மேலும் இக்காலையில் நாங்கள் இந்த கட்டிடத்தை விட்டுச் செல்கையில், "நாம் அங்கே இருந்தது நல்லது. நம்முடைய உணர்ச்சிகளை மாற்றியமைத்து, நாம் உள்ளே வந்த போது இருந்ததைவிட, வேறொரு வித்தியாசமான நபராக மாற்றும்படியாக, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்தார்" என்று கூறுவோமாக.
 196. பரிசுத்தவான்களுக்குள் உள்ள நம்பிக்கையை புதுப்பியும். கர்த்தாவே, வரப்போகின்ற நாளுக்கென்று அவர்களை பெலப்படுத்துவீராக. ஓ, பயிரானது பூரணமாக முதிர்ந்திருக்கின்றதே அறுவடைக்காக இயேசு சீக்கிரம் வருவார். இந்த ஆசீர்வாதத்தை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென்.
 197. அவள் அதை வாசிக்கையில், நாம் சற்றே ஒரு நிமிஷம், அமைதலுடன் அமர்ந்திருப்பது நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன்.
 நீர் எனக்கு வேண்டும், ஓ, எவ்வளவாய் நீர் எனக்கு வேண்டும்.
 198. அன்றிரவு ஜோர்ஜீ தன்னுடைய மரித்த சகோதரனை விட்டுவிட்டு வருகையில், என்ன நினைத்துக் கொண்டிருந்தான் என்று நான் வியக்கிறேன்; அவன் தெருவினூடாகச் செல்கையில், தன் இருதயத்துடிப்பு நின்று போய், அவன் முன் இருள் சூழ்ந்த போது; தனக்கு முன்னிருந்த இருக்கையில் தூக்கி வீசப்பட்டு, அவனுடைய மனைவியையும், நேசிப்பவர்களையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டான்.
 ஒவ்வொரு மணி வேளையும், நீர் வேண்டும்;
 ஓ, என் இரட்சகா, என்னையிப்போ ஆசிர்வதியும்,
 உம்மண்டை நான் வருகையில்,
 நாம் ஒன்று சேர்ந்து அதை பாடுவோம்.
 ஒவ்வொரு மணி வேளையும், நீர் வேண்டும்:
 ஓ.. (ஒவ்வொருவருக்கும்)
 நீர் கிட்டிச்சேர்க்கையில்,
 நீர் எனக்கு வேண்டும். ஓ. நீர் எனக்கு வேண்டும்.
 ஒவ்வொரு மணி வேளையும் எனக்கு..
 அவரிடத்தில் நாம் கைகளை உயர்த்துவோம்.
 ஓ. இரட்சகா என்னையிப்போ ஆசீர்வதியும்.
 உம்மண்டை நான் வருகையில்.
 199. மகத்தான யேகோவாவே, இப்பொழுது நீர் அசைவாடும். ஒவ்வொருவரையும் உம்முடைய ஆவியினால் முத்திரையிடும். நீண்ட நாட்களாக குறைவுபட்டிருக்கின்ற அந்த ஏதோவொன்றை, எங்களுடைய இருதயத்திலே வையும், அந்த ஜெயத்தை எங்களுக்கு தாரும், கர்த்தாவே, எங்களுக்கு மிகவும் தேவையாயுள்ள அந்த மேற்கொள்ளும் ஜெயத்தை அருள் செய்யும். பிதாவே, நீர் அதைச் செய்வீரா? நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம். இயேசுவின் நாமத்தில் இப்பொழுது வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
 200. இப்பொழுது, இங்கே ஜெபம் செய்யும் படியாக யாராவது உள்ளனரா என்று நான் வியக்கிறேன். நியூ ஆல்பனியிலிருந்து (New Albany) ஒரு சீமாட்டி என்னை அழைத்தாள், மேலும் யாரோ ஒருவர்... என்னை நியூ-ஆல் இருந்து அழைத்த ஒரு சீமாட்டி இருக்கிறாளா? அது சரி. சரி. இப்பொழுது இங்கே ஜெபிக்கும்படியாக, நீங்கள் கொஞ்சம் இப்பொழுது நாம்....
 சகோதரியே, நீ இசைத்துக்கொண்டிருந்த அந்த பாடலை தொடர்ந்து வாசிப்பாயா,
 201. பின்பு, சரியாக இங்கே இந்தப் பக்கத்தில், ஜெப வரிசைக்காக வரலாம். இப்பொழுது நீங்கள் சில நிமிஷங்களுக்கு பயபக்தியுடன் இருப்பீர்களானால். ஆகவே நாள் தேவையுள்ளவர்களுக்காக ஜெபிக்கும்படியாக, இங்கே வலப்பக்கத்தில் வரிசையில் நில்லுங்கள்.
 ...யோர்தானின் திசையில்...
 ஏதேனின் இனிமையான தளங்களில்
 ஜீவ விருட்சம் பூத்துக்குலுங்குகின்ற
 அங்கே, அங்கே உனக்கு இளைப்பாறுதல் உண்டு.
 இயேசு எல்லா விலங்குகளையும் உடைத்துப்போடுவார்.
 அவர் உன்னை...
 202. அவர் உட்கார விரும்பினால், அந்த சகோதரனுக்கு ஒரு நாற்காலியை கொடுங்கள். சகோதரனே நீர் உட்கார்ந்துகொள்கிறீரா?
 நான் என்றென்றும் அவரை துதிப்பேன்,
 நான் என்றென்றும் அவரை துதிப்பேன்,
 நான் என்றென்றும் அவரை துதிப்பேன்,
 என்னையவர் விடுவித்ததால்!
 203. இப்பொழுது, என்ன ஆயிற்று? இப்பொழுது ஜெபிக்கும்படியாக இங்கே வரிசையில் நின்றுகொண்டிருப்பவர்கள், தங்களுடைய சொந்த விசுவாசத்தைக் கொண்டு பயபக்தியுடன் விசுவாசத்தோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கு ஆமென்" என்று கூற வாஞ்சிப்பதால், திராட்சரசமானது புது துருத்திகளுக்குள் வந்திருக்கிறது என்று கூறும் படியாக வந்துள்ளனர்.
 204. வேதம் கூறியுள்ளது "உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் அவர்களுக்கு எண்ணெய் பூசி, அவர்களுக்காக ஜெபம்பண்ணக் கடவர்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். "அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். அல்லாமலும், மீண்டும் வேதாகமத்தில் "விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள்; அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்." என்று எழுதப்பட்டுள்ளது. தேவையுள்ளவர்களுக்கு ஊழியஞ் செய்யும்படியான தேவனுடைய கிரமம் இதுதான் என, நாம் இதைச் செய்யும்படி கற்பிக்கப்பட்டும், பரிசுத்த ஆவியானவரால் நெருக்கி ஏவப்பட்டுமிருக்கிறோம்.
 205. அது ஜெபிக்கின்ற அந்த தனிப்பட்ட நபர் ஒரு பரிசுத்தவானாகவோ அல்லது ஒரு தூதனாகவோ இருந்தாக வேண்டும் என்று பொருளல்ல. அதன் பொருள் என்னவென்றால், ஜெபிக்கும்படி வருகின்ற நபருக்கு, அவர்களுக்கு விசுவாசம் நிச்சயமாக உண்டாயிருக்க வேண்டும்; அதாவது பரிசுத்த ஆவியினவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டு கூவியழைத்து, அவர்கள் சொஸ்தமாக்கும் வரைக்குமாக அவர் அவர்கள் மேல் அசைவாடுவார் என்பதை விசுவாசிக்கத் தக்கதாக, ஏதோவொறு சிறு காரியத்தை அங்கே இட்டுள்ளார்.
 206. ஒரு ஸ்திரீக்கு உள்ளதைப் போன்ற மார்பு, மார்பகத்துடன் ஏல்- ஷ்டாய் என்ற நாமத்தில் தேவன் பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமுக்கு ஊட்சியளித்த போது, அவர் ஆபிரகாமே, நீ நூறு வயதுடையவளாக இருக்கிறாய். ஆனால் நானே அந்த 'மார்பகமுள்ள ஒருவர்'. ஒரு சூழந்தையைப் போல, என் மீது சாய்ந்து, பாலுண்பாயாக, நான் என் வார்த்தையை உறுதிப்படுத்துவேன்" என்றார்.
 207. மேலும், ஆபிரகாம். நூறு வயதுடையவனாயிருந்தும், தேவனுடைய மார்பில் சாய்ந்து; நிச்சயமாகவே அவனும் சாராளும் ஒன்றாயிருந்தனர். கற்றுக்கொள்ள தொடங்கவும், அசைவாடவும், தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளவும் ஆரம்பித்தனர். அப்பொழுது என்ன சம்பவித்தது? தேவன் அவனை ஒரு வாலிபனாக மாற்றினார்; அவனையும் அவனுடைய மனைவியையும், அவர்கள் ஈசாக்கு என்னும் ஒரு பிள்ளையைப் பெற்றனர்; அந்த ஈசாக்கின் மூலம் உலகத்தை ஆசிர்வதிக்கும் படியாக கிறிஸ்து வந்தார். அவன் ஜாதிகளுக்கு தகப்பனாக ஏற்படுத்தப்பட்டான்.
 208. ஏனென்றால், ஆபிரகாம் அவைகளை இருப்பவைகளாக அழைத்தான்" கவனியுங்கள், "இல்லாதவைகளை" தெய்வீக சுகமளித்தலின் விஷயத்திலும், ஆபிரகாமிடம் இல்லாத ஒன்றாயிருந்ததை.... அவன் அந்த வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொண்ட போது, அது சம்பவிக்க இருபத்தைந்து வருஷங்கள் ஆனது; இருபத்தைந்து வருஷங்கள். ஆபிரகாம் எழுபத்தைந்து வயதுள்ளவனாக இருந்தபோது, அவனுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது; நூறு வயதான போது தான், பிள்ளை பிறந்தது. ஆனால் இந்த இருபத்தைந்து வருஷங்கள் முழுவதிலுமே, தன்னை பூமியிலிருந்து அசைவாட்டி வெளிக்கொண்டு வந்த அந்த, பரிசுத்த ஆவியானவரிடம் திரும்ப அன்பை தொடர்ந்து செலுத்திக் கொண்டிருந்தான், பரிசுத்த ஆவியானவரின் வார்த்தையை "சரி" என்றழைத்துக்கொண்டும். இல்லாதவைகளை இருப்பவைக ளென்றும் அழைத்துக்கொண்டிருந்தான். ஏனெனில் அவை பரிசுத்த ஆவியின் வார்த்தைக்கு முரணாயிருந்தன. அவன் ஒரு வாலிபனாக மாற்றப்பட்டு, அந்த பிள்ளையைப் பெற்றான்.
 209. இப்பொழுது, அவ்விதமாகத்தான் நாமும் வருகிறோம். நாம் நாமும் அந்த ஆபிரகாமின் வித்தாயிருக்கிறோம். ஆகையால், அறிகுறிகள், நம்முடைய பாடுகள், நம்முடைய வியாதிகள் இவற்றிலும் கூட, இல்லாதவைகளை இருப்பவைகளாக அழைத்தோம். ஏனென்றால் நாம் பரிசுத்த ஆவியானவர், ஞானதிருஷ்டிக்காரனாகிய அந்த தீர்க்கதரிசியின் மூலமாக உரைத்தது சத்தியம் என்று கீழ்ப்படிகின்றோம்,
 அன்றியும் காலங்களினூடாக, அதை ஏற்றுக் கொண்ட எல்லா மனிதர்களும், ஒவ்வொரு வேளையுமே சரியாகவே வந்தனர்.
 210. இவ்வாறு நாம் இக்காரியங்களை "சரி" என்று அழைத்தும், அவைகளை நம்முடைய தனிப்பட்ட சொத்துடைமையாக ஏற்றுக்கொண்டும். உம்முடைய வார்த்தையே சத்தியமாகும். நான் அதைத் தவிர வேறு எந்த அறிகுறியோ வேறு எதையுமே புறக்கணித்து தள்ளுவேன். நீர் என்னை சொஸ்தமாக்குவீரென்று நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால் கர்த்தாவே உம்முடைய வார்த்தை 'விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்குமென்றும், தேவன் அவர்களை எழுப்புவார்' என்றும் உரைத்துள்ளது. அவ்வளவுதான், அது மட்டுமே சத்தியம் என்று பரிசுத்த ஆவியானவருக்கு திரும்பி அன்போடு நயந்து உறவாடுவீர்கள்.
 211. இக்காலையில், நான் வியக்கிறேன்... சகோதரன் ஜாக்சன் இங்கு உள்ளாரென அறிவேன்; அவர் அங்கே பின்னால் இருந்து "ஆமென்" என்று கூறுவதை கேட்டேன். தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் உள்ள மற்ற வேறு ஊழியக்காரர்கள் இக்காலை வேளையில் இந்த ஜனங்களுக்காக, வந்து எங்களுடன் நிற்க விரும்புகின்ற மற்ற ஊழியக்காரர்களும் இங்குள்ளனரா என்று வியக்கிறேன். அவர்கள் கிறிஸ்துவுக்குள் உங்களுடைய சகோதரரும் சகோதரிகளு மாயுள்ளனர். நம்முடைய போதகர் இங்கே முன்னே வருகையில், நீங்களும் இங்கே வந்து எங்களுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்புவீர்களானால், அப்படியானால், அவர் வியாதியஸ்தர்களுக்காக இக்காலையில் ஜெபிப்பார். உங்களில் ஏனையோர் யாராகிலும், வந்து, இங்கே எங்களுடன் உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளலாம். இன்று காலை வேளையில் இக்கட்டிடத்திலிருக்கின்ற தேவையுள்ளவர்களுக்காக நாம் ஊழியம் செய்கையில், ஊழியக்காரராகிய உங்களில் யாராயினும் வர விரும்பினாலும், நான் தவறாக அடையாளம் காணவில்லையெனில் டெடியை (Teddy) சற்றுமுன் அங்கே கண்டேன் என்று நினைக்கிறேன். மற்ற எந்த ஊழியக்காரர்களானாலும், நீங்கள் யாராயிருப்பினும், அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை எங்களுடன் இணைத்துக் கொள்ளும்படி, நீங்கள் ஒரு ஒரு விசுவாசியாக இருப்பீர்களானால், நாம் தேவையுள்ளவர்களுக்காக ஜெபிக்கும் வேளையில், நீங்கள் இங்கே வருவதில் நாங்கள் மகிழ்ச்சியுடையவர்களாக இருக்கிறோம்.
 212. இப்பொழுது, நாம் அவர்களுக்காக ஜெபிக்கையில், வரிசையை ஒழுங்கு செய்யும்படி, மூப்பர்களை, சகோதரன் ஹிக்கின்பாத்தம் மற்றும் இங்கே நின்று கொண்டிருப்பவர்களும் வரும்படி விரும்புகிறேன். பின்பு நாம் உடனடியாகவே ஊழியம் செய்வோம்.
 213. இப்பொழுது, ஊழியக்கார சகோதரர்களே, இங்கே கடந்து வாருங்கள், அதற்காக.. ஆகவே, நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்ற இந்த முதலாவது ஜெபிப்போம். அதன்பின் நாம் இருவருக்காக நாம் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யலாம்.
 214. கர்த்தராகிய இயேசுவோடு, நட்புடன் பேசிப்பழகும் நிலையில் இங்கேயிருக்கின்ற ஒவ்வொருவரும் (நீங்கள் யாவரும், இக்காலையில் அவ்விதமாகவே இருக்க வேண்டும்), நீங்கள் எங்களுடன் இணையுமாறு விரும்புகிறேன். இதுவாக இருக்குமென்றால்... அது ஒருகால் உங்களுடைய சகோதரனோ, உங்களுடைய சகோதரியோ, உங்களுடைய தகப்பன் அல்லது தாயாகவோ, அவர்கள் சொஸ்தமாக வேண்டுமென நீங்கள் வாஞ்சிக்கக்கூடும். அல்லாமலும் அது உங்களுடைய விசுவாசமானது, விசுவாசத்தை உயர்த்திக் காண்பித்தல், ஒரு மகத்தான வெடிபொருளைப் போன்று, கடந்து சென்று, தேவனுடைய ஷெகேனா மகிமையை இங்கே கீழே கொண்டுவந்து, அந்த தனிப்பட்ட நபருக்கு விசுவாசத்தை உண்டாக்கும்படி அபிஷேகிக்கின்றது. "விசுவாசம் கேள்வியினாலே வரும், வசனத்தைக் கேட்பதினாலே வரும்."
 215. இப்பொழுது, நீங்கள் ஏற்றுக் கொண்ட தேவனுடைய வார்த்தையை உங்களுடைய இருதயத்துக்குள் உட்புகுத்தும் படிக்கு, பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார். அதன்பின் - பின்னர், நீங்கள் அதை விசுவாசிக்கும் போது, நீங்கள் வருகின்றீர்கள்.
 216. இப்பொழுது, என்னுடைய மற்றும் இந்த ஊழியக்காரர்களுடைய கடமை என்னவாகயிருக்கின்றது? உங்கள் மீது கைகளை வைப்பது தான். தேவன் "விசுவாசமுள்ள ஜெபம், பிணியாளியை இரட்சிக்கும்" என்று உரைத்துள்ளார்.
 217. அப்பொழுது நீங்கள் அதை அப்படியே எடுத்துக் கொண்டு, பரிசுத்த ஆவியானவரிடத்திற்கு அன்பை திரும்ப செலுத்துவீர்கள். "பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய வார்த்தை சத்தியமாயிருக்கிறது. நான் இனிமேல் சுகவீனமாயில்லை, எல்லா நேரத்திலும் சுகமடைந்து கொண்டேயிருக்கிறேன். நீர் என்மேல் காண்பித்த உம்முடைய கிருபைக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். பரலோக பிதாவே, நான் ஒவ்வொரு நாழிகையும், ஒவ்வொரு மணிநேரமும் தொடர்ந்து சுகமாகிக் கொண்டேயிருக்கின்றேன்" என்று உங்களோடு வார்த்தையின் மூலமாக அசைவாடிக் கொண்டிருக்கின்ற, பரிசுத்த ஆவியானவருக்கு நீங்கள் திரும்ப அன்பால் அசைவாடும் போது, என்ன சம்பவிக்கிறதென்று கவனித்து பாருங்கள்.
 இப்பொழுது நான் ஜெபிக்கிறேன், அதன் பின்பு, நாங்கள் வந்து கைகளை வைப்போம்.
 218. இப்பொழுது, தேவனாகிய பிதாவே, தேவை என்னவென்பதை நீர் காண்கிறீர், அன்றியும் ஒவ்வொரு தேவைகளையும் சந்திப்பதற்கு நீர் வெகு நிச்சயமாகவே போதுமானதற்கும் மேலானவராயிருக்கிறீர். தானியேலை சிங்கங்களின் குகையிலிருந்து எடுக்கவும், எபிரெய பிள்ளைகளை அக்கினிச் சூளையிலிருந்து வெளியே எடுக்கவும். சிவந்த சமுத்திரத்தை பிளந்து, அந்த ஜனங்களை உலர்ந்த தரையில் நடக்கச் செய்யவும், மரித்த லாசருவை உயிரோடெழுப்பவும், எலியாவை ஒரு இரதத்தில் வீட்டுக்கு எடுத்துக்கொள்ளவும் போதுமானவர் நீர். தேவனே, நீர் ஒருபோதும் தோல்வியுற்றதே கிடையாது.
 219. புது திராட்சரசத்துடன் இந்த புது துருத்திகள், புது நம்பிக்கையுடனும், புதிய ஜீவனுடனும், அபிஷேகிக்கப்படுமாறும், அந்த வார்த்தையை நினைவுகூறும் படியாக தங்கள் மேல் கைகளை வைக்கப் படுவதற்காகவும், இன்று காலையில் முன்னே வந்திருக்கின்றனர்.
 220. அன்றியும், பிதாவே, "வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள்; அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று நீர் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளபடி. நாங்கள் எங்களுடைய கைகளை வைக்கும் படியான மனிதர்களாய் நிற்கின்றோம். அந்த கட்டளையானது "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப் படுவான்" என்ற சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்கும்படியான கட்டளையைப் போன்றே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
 221. மேலும், பிதாவே, நாங்கள், தங்களுடைய விசுவாசத்தை பிசாசின் வல்லமைக்கு எதிராக பரிசோதிக்கும்படிக்கு முன்னே வந்திருக்கின்ற இந்த ஜனங்களின் அறிக்கையிடுதலின் பேரில், நீர் உம்முடைய வார்த்தையை இன்றைய நாளில் நிறைவேற்றும்படியாக வேண்டிக்கொள்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் விடுதலை பெற்றவர்களாக செல்வார்களாக. கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.
 222. இவர்களுக்கு நாம் ஊழியம் செய்யும்படிக்கு முன்னால் நடந்து வருகையில், உங்கள் தலைகளைத் தாழ்த்துவீர்களாக.
 223. கர்த்தராகிய இயேசுவின் ஐக்கியத்துக்குள், எங்களுடைய பிரியமான சகோதரியே, சிலுவையின் ஊழியக்காரராக, நாங்கள் இப்பொழுது, உயிர்த்தெழுதலில் உள்ள அவருடைய ஆசீர்வாதத்திற்கு திவ்விய பங்காளிகளாக, அவருடைய வார்த்தையின் நினைவுகூறுதலாக, பொல்லாத பிசாசின் ஆவி உள்ளை விட்டு நீங்கி போகும்படி, இயேசுவின் நாமத்தில் நாமத்தில் கேட்கிறோம்; நீ சொஸ்தமடைவாயாக, அனுடைய விசுவாசம் ஒருபோதும் அசைக்கப்படாதிருப்பதாக. ஆனால், நீ உன்னை இப்பூமியின் தூனிலிருந்து எடுத்து, உன்னுடைய ஒவ்வொரு பாகங்களையும் உன் சரீரத்தில் வைத்த, உன்னுடைய பெலனாகிய கூவிக்கொண்டிருக்கும். பரிசுத்த ஆவியாகிய தேவனிடமிருந்து உதவியை பெற்றுக் கொள்வாயாக. அவர் உண்டாக்கியதை சாத்தான் கிழித்திருந்தாலும், அதை பழுது பார்க்க அவர் போதுமானவராயிருக்கிறார். உன்னை ஒரு விசுவாசியாக, அவருடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் தேவனிடத்தில் சமர்ப்பிக்கிறோம்.
 224. மேலும் எங்களுடைய சகோதரன் மீதும், அதே ஜெபத்துடன் எங்களுடைய கைகளை வைத்து, எங்கள் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடும், இந்த காரியங்கள் செய்யப்பட வேண்டுமென்ற கட்டளையுடனும், விசுவாசிக்கின்ற ஊழியக்காரராகிய நாங்கள், உன்னை நீ மண்ணிலிருந்த போது, உனக்கு உதவி செய்து, உன்னுடைய ஒவ்வொரு அங்கத்தையும், உன் சரீரத்துக்குள் வைத்த பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கு முன்பாக உன்னை சமர்ப்பிக்கின்றோம். சாத்தான் வந்து இடையூறு விளைவித்து, உங்களுடைய சரீரத்தை உடைத்துப் போட்டிருந்ததை காண்கையில், பலிபீடத்தண்டை வந்து கொண்டிருக்கும், இந்த ஜனங்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் போது, அது அதை செய்ய பண்ணுமா? அல்லது எந்த ஒரு அவிசுவாசத்தின் காரணமாக அல்லது தவறுவதனால்...?... தேவன் சொஸ்தமாக்கி ஆசீர்வதிக்குமாறு வேண்டுகிறோம்..?...இந்த பயபக்திக்குரிய கடமையைச் செய்யும்போது. நாங்கள் இந்த வார்த்தையின் ஞாபகார்த்தமாகவே உன் மீது கைகளை வைத்திருக்கிறோம். உன் உள்ளத்தில் உள்ளதை அறிந்திருக்கவில்லை, எனினும் சர்வ வல்லமையுள்ள தேவனிடம் வேண்டிக் கொள்கிறோம்; உன்னை பூமியிலிருந்து அசைவாட்டி எடுத்த அவர், உன் சரீரத்திலுள்ள இன்றியமையாத, பலவீனமான பாகங்களை பழுது பார்ப்பார், அல்லது பலப்படுத்துவாராக, அல்லாமலும் உன்னுடைய பரிபூரண ஆரோக்கியமான நிலைக்கு திரும்ப கொண்டு வருவாராக, இயேசுவின் நாமத்தினாலே.
 225. எங்களுடைய அருமையான சகோதரியே..?.. (ஒலிநாடாவில் காலியிடம் - தமிழாக்கியோன்) அவளால் நாங்கள் உன் மீது கைகளை வைத்து அதை கேட்குமாறு...?...அவளால் இயலாதா...?...பரிசுத்த ஆவியை...?... என்றாவது ஒரு நாள்...?... தேவனுடைய நாம மகிமைக்காக மட்டுமே. இப்பொழுது எங்கள் சகோதரியே, நாம் தலைகளைத் தாழ்த்திய வண்ணம் நின்று கொண்டிருக்கையில், சர்வ வல்லமையுள்ள தேவன், ஆதியிலேயிருந்த லோகோஸை அனுப்பும் படியாக வேண்டிக்கொள்கிறோம் ...?... மற்றும் அந்த வெவ்வேறு நிறங்கள்...?... நாம் யாவரும், நாம் யாவரும் அந்த ஒன்றிற்காகவே ஜெபிக்கிறோம்...?... மாசற்ற ஒரு சபையை தேவனுக்கு முன்பாக கொண்டு சென்று, அவரிடம் வழங்கும்படிக்கு இப்பொழுது நாம் பரிசுத்த ஆவிக்கு ஒப்புக்கொடுக்கின்றோம், மேலும்...?... அவற்றின்...?... மணவாட்டியை ஓ. பரிசுத்த ஆவி...?... அன்றியும் இந்த ஸ்திரீ குணமடைந்து, அவளை நாம் தேவனுக்கு சமர்ப்பிக்கும் வேளையில், பெலனடையுமாறு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன். ஆமென்.
 226. சர்வ வல்லவரே: சர்வ வல்லமையுள்ள தேவனே, எல்லையற்ற ஒருவரே, சர்வ வியாபியும், சர்வ வல்லமை பொருந்தினவருமாய், ஆகாயவெளி முழுவதும் நிறைந்திருப்பவரே! நாங்கள் எங்கள் சகோதரியின் மேல் கைகளை வைத்து, மற்றவர்களுக்கு ஜெபித்த அதே ஜெபத்துடன், அவளை உமக்கு முன் கொண்டுவருகிறாம். குறைவுபட்டுள்ளதும், பிசாசினால் திருடப்பட்டு போனதுமாயுள்ள அக்காரியத்தை அவளுடைய சரீரத்தில் நீர் செயல்படுத்துவீராக. அல்லாமலும்..?...தேவனுடைய மகிமைக்கென்று
 227. தேவனாகிய பிதாவே. அதே ஜெபத்துடன், எங்களுடைய சகோதரியின் மீதும் கரங்களை வைக்கின்றோம். அது...?... இவ்வாசீர்வாதத்தை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
 228. தேவனாகிய பிதாவே, முதிர் வயதின் காரணத்தால், இந்த மனிதனுடைய சரீரத்தின், தோள்கள் தொங்கி, முகத்தில் சுருக்கமடைந்து, தன் சரீரத்தில் காயமடைந்திருக்கிறார். ஆனால், தேவனே, நீர், அசைவாடிக் கொண்டிருந்த பரிசுத்த ஆவியானவராயிருக்கிறீரே, நாங்கள் அவரை இயேசுவின் நாமத்தில் உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் ஒரு மகத்தான அன்புடன் திரும்பி வந்து, தன்னை மண்ணிலிருந்து எடுத்த அந்த ஒருவரால், தான் சிருஷ்டித்ததை, பழுது பர்க்கவும் கூடும் என்பதை நாங்கள் அடையாளம் கண்டு கொள்ளும் படி செய்வீராக!